ஃபேஷன்புதியவை

உடல் அமைப்புக்கு ஏற்ற ஆடை

உங்கள் உடல் அமைப்பிற்கு ஏற்ற ஆடைகளை சரிவர தேர்வு செய்யுங்கள்.

ஒல்லியான உடல்  அமைப்பு:

– இந்த வகை உடலுக்கு, பிளவுஸும் பேண்ட்களும் சரியாக பொருந்தும். பென்சில் பேண்ட்களைத் தேர்ந்தெடுக்கவும், அவை உங்கள் இடுப்பை எடுப்பாக காட்டுவதோடு, கால்களுக்கும் அழகான அவுட்லைனைத் தரும்.
– கருப்பு வெள்ளை போன்ற அடிப்படை நிறங்களைப் பயன்படுத்தினால், மெட்டாலிக் ஜாக்கெட் மற்றும் அடர் நிற காலணியை அணிவதன் மூலம் அவற்றை சுவாரஸ்யமாக்குங்கள்.
– மெரூன் போன்ற அடர்த்தியான நிறங்கள், கருப்பு வெள்ளை நிறங்களுடன் சரியாக பொருந்தும். எனவே ஒரு இரவு நேர பார்ட்டிக்கு, மெரூன் லிப்ஸ்டிக்கும், மெரூன் நிற ஹீல்ஸும் உங்களுக்கு சிக்கென்ற தோற்றத்தைத் தரும்.

பியர் (பேரிக்காய்) உடல் அமைப்பு:

– பியர் அல்லது மணல் கடிகார அமைப்பில் உள்ள உடலுக்கு, பென்சில் ஸ்கர்ட் அற்புதமாக பொருந்தும். பிரிண்ட் செய்த ஸ்கர்ட்டைத் தேர்ந்தெடுத்தால், அதனுடன் திடமான நிறமுள்ள, ஆழமான கழுத்து டிசைன் கொண்ட பிளவுஸ் அல்லது ஷர்ட்டை சேர்த்து அணியவும்.
– உங்கள் இடுப்பு வரை நீண்டிருக்கு ஷார்ட் ஜாக்கட்டை சேர்த்து அணியவும்; அதை விட நீளமாக இருந்தால், உங்கள் இடுப்புப் பகுதியை தடிமனாக காண்பிக்கும்.
– உங்கள் காதணிகளை எடுப்பாக காண்பிக்குமாறு கூந்தலை அலங்காரம் செய்யவும். ஒரு கை வளையல் அல்லது மோதிரத்தையும் அணியலாம், இதனால் பகல் நேர தோற்றம் இன்னும் மேம்படும்.
– இதே போன்ற டோனில் உள்ள அடிப்படையான ஹீல்ஸைப் பயன்படுத்தவும்.
–  மெட்டாலிக் அல்லது ஷிம்மர் லிப் கலரை அணிந்தால், இரவு நேர பார்ட்டிக்கான கிளாமர் உங்களுக்கு கிடைக்கும்.

குள்ளமான ஒல்லியான தோற்றம்:

– நீங்கள் இந்தத் தோற்றத்தில் இருந்தால், உங்கள் கால்களை அழகாக காண்பிக்கும் ஒரு ஆடையைத் தேர்ந்தெடுக்கவும். இதனால் உயரமாக இருப்பது போன்ற தோற்றம் கிடைக்கும். இதுபோன்ற உடல் வகைகளுக்கு இடுப்பு உயரமாக உள்ள ஆடைகள் சரியாக பொருந்தும்.
– நளினமாக தோன்ற, பூனைக்குட்டி கழுத்துக்காலர் பிளவுஸுடன் இதை அணியலாம். இதற்கும் மேல் ஒரு ஓவர்கோட் அல்லது பாய்ஃப்ரெண்டின் ஜாக்கெட்டை அணிந்து கொண்டால், உங்கள் தோற்றம் இன்னும் உயரமாக தெரியும்.
– கிளாக் செறுப்புகள் பகல் மற்றும் மாலைநேரங்களுக்கு அணிய ஏற்றவை

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker