ஐந்தே நிமிடத்தில் அழகான கூந்தல் அலங்காரம்
பெண்கள் கூந்தலை பேணிப் பாதுகாத்து, அடர்த்தியாக வளர்ப்பதே விதவிதமாக அலங்காரம் செய்துகொள்வதற்காகத்தான். புதிய கூந்தல் அலங்காரம் என்பது பெண்களுக்கு அழகை மட்டுமல்ல, தன்னம்பிக்கையையும் தருகிறது. அதனால் பெண்கள் வித்தியாசமான கூந்தல் அலங்காரங்களை விரும்புகிறார்கள். அது விரைவாக செய்து முடிக்கக்கூடியதாக இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.
முடியில் சிறிதளவு ‘சீரம்’ தேய்த்து நன்றாக சீவுங்கள். பின்பு நடுவில் உச்சி எடுத்து, கூந்தலை மூன்று பிரிவாக பிரியுங்கள். பிரித்து முடித்ததும், நெற்றியில் இருந்து நான்கு அங்குல பகுதியில் மீ்ண்டும் வகிடு எடுத்தால் பார்க்க அழகாக இருக்கும். இருபுறமும் கூந்தல் காதுகளை மறைத்தபடி தோளில்புரளும்.
கூந்தலை மூன்று பாகங்களாக்குங்கள். அதன் பின் பகுதி முடியில் ஒரு ‘பன்’ பயன்படுத்தி, சிறிது உயர்த்தி இறுக்கமாக கட்டுங்கள். மீதி முடியை இருபுறங்களாக சம அளவில் பிரித்துவிடலாம். இது மற்றவர்களை திரும்பிப்பார்க்கவைக்கும். உடைக்கு பொருத்தமாக அமையும்போது கூடுதல் அழகுதரும்.
முன்பகுதி முடியை சிறுசிறு பகுதிகளாக பிரித்து, பின்னோக்கி இழுத்து ‘பின்’ செருகுங்கள். ஒரு அங்குல கனத்தில் பிரிக்கவேண்டும். மொத்த முடியையும் இப்படி ‘பின்’ செய்த பின்பு ‘பன்’ உபயோகித்து ‘போனிடைல்’ போட்டுக்கொள்ளலாம்.
இது ஒரு வித்தியாசமான அலங்காரம். படத்தில் இருப்பதுபோல் கூந்தலை சீவி, பிரித்து, பின்னால் கட்டி கொண்டை போடுங்கள். இது அதிக வேலைப்பாடுகொண்டது. மாடர்ன் டிரஸ்க்கு மட்டுமின்றி, பாரம்பரிய உடைகளுக்கும் இது பொருத்தமாக இருக்கும். இந்த கூந்தல் அலங்காஇஇரத்த ின்போது பொருத்தமான காதணிகள் அணிந்தால், அழகில் ஜொலிக்கலாம்.