ஃபேஷன்புதியவை

காலணிகளின் மீது பெண்களுக்கு இருக்கும் ஆர்வம்

அழகான ஆடைகளை அணிந்திருந்தாலும் அதற்கு ஏற்ற காலணிகளை அணியவில்லை என்றால் அந்த அலங்காரம் முழுமை அடையாது என்றுதான் சொல்ல வேண்டும். உலகெங்கிலும் உள்ள பிரபலங்கள் தங்களது உடைக்கு ஏற்றாற்போல வெவ்வேறு வகையானஷூ மற்றும் செப்பல்களை அணிந்து விழாக் களுக்கும், ஷோக்களுக்கும் வருவதைப் பார்க்க முடியும். இவ்வாறு அவர்கள் அணிந்து வரும்பொழுது எந்த ஒரு பொருளும் மிகப் பிரபலமாகவும் அதே சமயம் முழுமையான ஸ்டைலை அறிமுகப்படுத்துவதாகவும் உள்ளது.

காலணிகளின் மீது பெண்களுக்கு இருக்கும் ஆர்வம் அனைவரும் அறிந்த ஒன்றே. அவர்கள் லான்களில் நடந்து செல்ல நியான் செப்பல்கள், அலுவலகங்களுக்கு ஷூக்கள், ஷாப்பிங்கிற்கு சாண்டல்ஸ் மற்றும் மேற்புறத்தில் துளைகள் கொண்ட ப்ரோக்ஸ், ஸ்னீக்கர்ஸ், பார்ட்டி களுக்கு வெட்ஜஸ் என்று பல வகையான காலணிகளை அணிந்து செல்வதை விரும்புகிறார்கள்.

திருமணங்கள், கலாச்சார விழாக்கள் மற்றும் பிரமாண்டமான பண்டிகை விழாக் களுக்கு சிறந்த பாதணிகளைத் தேர்ந்தெடுத்து அணிவது ஒரு கடினமான பணியாக உள்ளது. கனமான இந்திய உடைகளுக்கு ஏற்ற காலணி பாணிகளை நாம் அறிந்து கொள்ளலாம் வாங்க…

ஜூத்திஸ் அல்லது மொர்ஜாரிஸ்

ஜூத்திஸ் என்பது ஹுல் இல்லாத தட்டையான இந்திய ஷூவாகும். இவை பெரும்பாலும் கேஷுவல் அல்லது செமி ஃபார்மல் ஆடைகளுக்கு ஏற்றவை. இன்று ஜூத்திஸ் சிறுமிகள், வயதான பெண்கள், பழமைவாத பெண்கள் மற்றும் நவீன பேஷன் விரும்பிகள் என அனைவராலும் அணியப்படுகின்றது.

இவற்றை ரெகுலர் சல்வார்ஸ், அனார்கலி சூட்ஸ், குர்திஸ், டிசைனர் அவுட்ஸ்பிட்ஸ், லெஹங்காஸ் மற்றும் பார்ட்டி கெளன்களுடன் அணிந்து கொள்ளும் விதத்தில் தட்டையான ஷூவின் மேற்புறம் கண்ணாடிகள் ஒட்டப்பட்டு கோல்டன் ஜரிவேலைப்பாட்டுடனும், வண்ண வண்ண எம்ப்ராய்டரி வேலைப்பாட்டுடனும், மிகவும் அழகாக கண்ணை கவரும் விதத்தில் உள்ளன. இவ்வகை ஜூத்திகளின் பிறப்பிடம் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களாக இருந்தாலும் இன்று அனைத்து மாநிலங்களிலும் அற்புதமான வடிவமைப்பு களுடன் கிடைக்கின்றன. மணமகன் மற்றும் மணமகள் அணிந்து கொள்ளக்கூடிய தனியாக வடிவமைக்கப்பட்ட ஜூத்திஸ் மிகவும் பிரபலம்.

பெலரினாஸ் மற்றும் சாண்டல்ஸ்

இந்திய பாணியில் இருக்கும் பெலரினால் ஜூத்திகளை ஒத்திருந்தாலும் மிகவும் சமகால தோற்றத்தைப் பிரதிபலிக்கின்றது.

சாண்டல் எண்ணற்ற ஸ்டைகளில் பெரும்பாலான இந்திய ஆடைகளான சேலைகள், ஸ்ட்ரெய்ட் கட் சூட்ஸ், லெஹங்கா, லாங் ஸ்கர்ட்ஸ் மற்றும் லெஹங்கா சூட்டுகளுடன் அணிந்து கொள்ளும் விதமாக விற்பனையில் உச்சம் தொடுகின்றன.

வெட்டிங் ஹீல்ஸ்

திருமண வரவேற்பு, திருமண பார்ட்டி மற்றும் நவீனத் திருமண ஆடைகளுடன் இதுபோன்ற ஹீல்ஸ்களை அணியும் பொழுது அவை அணிபவருக்கு ஆளுமையையும், பிரமாண்டத்தையும் தருவதாக இருக்கும்.

திருமண வைபவங்களுக்கு அணியும் காலணிகள் என்பதால் அவற்றில் கிறிஸ்டல்கள் பதித்துப் பளபளப் பானதாக இருக்கும். நம்முடைய தனிப்பட்ட (கஸ்டமைஸ்டு) ஆடைகளுக்கு ஏற்ற தனிப்பட்ட ஹீல்ஸ்களை வடிவமைப்பதற் கென்றே காலணி வடிவமைப் பாளர்கள் உள்ளனர்.

இந்திய செப்பல், ஃபிலிப் ஃப்ளாஸ் மற்றும் சாண்டல் செப்பல்ஸ்

குர்தி ஜீன்ஸ் காம்போ, சுரிதார் சூட் அல்லது நீண்ட பாவாடை மற்றும் குர்தி காம்போ போன்ற சாதாரண இந்திய ஆடைகளுடன் அணிந்து கொள்ள ஏற்றவையாக இவ்வகை செப்பல்கள் உள்ளன.

பெருவிரலுக்கும், மெட்டி விரலுக்கும் இடையே தண்டு போன்ற பாகத்தின் மேல் பூ வேலைப்பாடு, பாதத்தின் மேற்புறம் பட்டையான வேலைப்பாட்டுடன் கூடிய வார் இவை பார்ப்பதற்கு பழைய கால பாத ரட்சை போன்ற தோற்றத்தை ஞாபகப்படுத்துகின்றது. அதே சமயம் ஸ்டைலான தோற்றத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.

தட்டையான செப்பல்கள் நவநாகரீகமாகவும் அதே சமயம் வசதியாகவும் உள்ளன. தட்டையான செப்பல்களை விரும்பாதவர்களாக இருந்தால் ப்ளாட் ஃபார்ம் அல்லது கிட்டன் ஹீல்ஸ் ஸ்டைலைத் தேர்ந்தெடுக்கலாம். இதுபோன்று அலங்கரிக்கப்பட்ட குதிகால் செப்பல்களை புடவைகள் மற்றும் நவராத்திரி லெஹங்காக்களுடன் அணியலாம்.

* ஃபிலிப் ஃப்ளாப் செப்பல்களை அருகிலிருக்கும் கடைகள் மற்றும் அக்கம் பக்கம் சென்று வர அணியலாம். விரல்களுக்கு இடையே எந்தப்பிடிப்பும் இல்லாததால் இள வயதினரின் தேர்வாக இவை உள்ளன.

பராமரிப்பு டிப்ஸ்

* அன்றாடம் அணியும் நியான், ஹவாய் மற்றும் ஃபிலிப் ஃப்ளாப் செப்பல்களை சோப்புகளை உபயோகித்துக் கழுவி நன்கு காயவைத்து பின்னர் உபயோகிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

* ஜூத்திஸ், வெட்டிங் ஹீல்ஸ் போன்றவை மிகவும் பளபளப்பாக கண்ணாடி மற்றும் கற்கள், எம்ப்ராடரி வேலைப்பாட்டுடன் இருப்பதால் அவற்றின் மீது தூசு படியாமல் மூடிய அலமாரி மற்றும் ஷூ ஸ்டாண்டுகளில் வைக்கலாம். அதே போல் மென்மையான ப்ரஸ்களை உபயோகித்து தூசு தட்டலாம். எக்காரணம் கொண்டும் பிளாஸ்டிக் பைகளில் போட்டு சுற்றி வைக்கக்கூடாது.

* மழை நேரங்களில் தண்ணீரில் நனையாமல் வைக்க வேண்டும். அதே போல் காற்றோட்டம் இல்லாமல் காலணிகளை வைக்கும் பொழுது அவற்றின் மேல் பூஞ்சைக் காளான் படர்ந்து துர்நாற்றம் வீசத்துவங்கிவிடும். எனவே, காற்றோட்டமாக வைக்க வேண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker