ஆரோக்கியம்புதியவை

கட்டுடலுக்கு சொந்தமானவர்களும் அவர்கள் பின்னே இருக்கும் பிட்னஸ் பயிற்சியாளர்களும்

கட்டுடலுக்கு சொந்தமானவர்களும் அவர்கள் பின்னே இருக்கும் பிட்னஸ் பயிற்சியாளர்களும்… ஸ்டார்களுக்கு ஃபிட்னஸ் பயிற்சி அளிக்கும் வல்லுனர்களிடம் இருந்து பயிற்சி ரகசியங்களை கேட்டறிகிறார் ஃபாயே ரெமிடியாஸ்.
நட்சத்திர ஆரோக்கிய மற்றும் ஃபிட்னஸ் வல்லுனரான வினோத் சன்னா, நடிகை ஷில்பா ஷெட்டி, முதல் குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு எடை குறைப்பதில் கவனம் செலுத்திய போது அவருடன் இணைந்து பணியாற்றத் துவங்கினார். “குழந்தை பிறப்பிற்குப் பிறகு அவர் ரியாலிட்டி ஷோ ஒன்றில் நடுவராக இருந்தார். இறுதி நாள் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க வேண்டியிருந்தது. அதற்குள் தனது பழைய உடல் வாகை பெற முடியுமா என தயங்கிக் கொண்டிருந்தார். இந்தச் சவாலை ஏற்றுக்கொள்ள அவரை சம்மதிக்க வைத்து, அவரை பழைய நிலைக்கு திரும்ப வைக்க எனக்கு மூன்று மாதங்கள் கொடுக்குமாறு கூறினேன்” என்கிறார் அவர். கட்டுடல் கொண்ட மாடல் அழகியும், நடிகையுமான ஷில்பாவுக்கு உருவாக்கிய உணவு மற்றும் பிட்னஸ் திட்டத்தை சன்னா பகிர்ந்துகொள்கிறார்.

Trendylife

தீவிர உழைப்பு

“ஷில்பாவின் உடல்வாகு எக்டோமார்ஃப் வகையைச் சேர்ந்தது. அதாவது ஒல்லியான, கச்சிதமான உடல் வாகு. அதனால்தான் குழந்தை பெறுவதற்கு முன் அவர் ஒல்லியாக இருந்தார். தவறான உணவுப் பழக்கம், அதிக உடல் இயக்கம் இல்லாதது அவரை எடை போட வைத்து, உறுதி மற்றும் ஃபிட்னஸை இழக்க வைத்தது. மேலும் அவருக்கு முழங்கால், கழுத்து, கீழ் முதுகில் வலி இருந்தது. எனவே அவரை ஒர்க் அவுட் செய்ய வைப்பது துவக்கத்தில் கடினமாக இருந்தது” என்கிறார் அவர். அவரது உடல் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கச் செய்ததோடு, தொடைப் பகுதி தசைகளை வலுவாக்கவும் செய்தார் சன்னா. அதே நேரத்தில் அடிப்படை ஒர்க் அவுட்டும் செய்ய வைத்தார். அவர் வாரத்தில் 2 நாட்கள் யோகா செய்ததோடு, ஏரோபிக் பயிற்சியும் துவங்கினார். கார்டியோவையும் தவறாமல் செய்தார். வாரத்தில் மூன்று நாள் வலுப் பயிற்சி செய்தார். அனிமல் ஃப்ளோ ஒர்க் அவுட் மற்றும் தீவிர கண்டிஷனிங் ஒர்க் அவுட்டையும் ஷில்பா மேற்கொண்டார்.

உணவு

“குறைந்த மாவுச்சத்து உணவை தீவிரமாக கடைபிடித்தார்- காய்கறிகள், பழங்களுடன் புரதத்தை சமன் செய்தார். நாள் ஒன்றுக்கு 5 அல்லது 6 முறை சிறிய அளவில் உணவு உட்கொண்டார். மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு பழுப்பு அரிசி சாதம், ஒரு ரொட்டி, சப்ஜி, காய்கறி ரசம் அல்லது பழரசம் எடுத்துக்கொண்டார். 3 மாதங்களில் 21 கிலோ எடை குறைய வைத்தேன். திரையில் பார்த்து பழக்கப்பட்டதை விட சிறந்த வடிவத்தை நோக்கி அவரை உழைக்க வைத்தேன். சரியான வழிகாட்டுதல், ஈடுபாடு, தியாகம் மூலம் எதுவும் சாத்தியம்

More related news click this 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker