அழகு..அழகு..புதியவை

செல்ஃபி மேக்அப்

எல்லா பெண்களுக்குமே தாங்கள் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது. நான் இப்பதான் முதன்முறையாக மேக்கப் போட்டுக்கப் போறேன். நான் எப்படி மேக்கப்பை முறைப்படி போடுவது? என்கிறீர்களா? கவலையை விடுங்கள். இது உங்களுக்கான டிப்ஸ்தான்.

கல்லூரியிலிருந்தோ அல்லது வேலை முடிந்தோ வீட்டுக்குள் போனவுடன் தரமான க்ளென்ஸரை முகத்தில் புள்ளி புள்ளியாக வைத்து, பின்னர் கீழிருந்து மேல் நோக்கி முகம் முழுவதும் தடவுங்கள். ஒரு நிமிடம் கழித்து சிறிதளவு பஞ்சால் முகத்தை அழுத்தி (மேல் நோக்கி) துடைக்கவும். இதனால் முகத்திலுள்ள அழுக்கெல்லாம் வெளியேறி விடும். முகத்தை க்ளென்ஸிங் செய்தவுடன், முகத்திலுள்ள துளைகளெல்லாம் ஓப்பனாகி விடும். இதற்கு தரமான டோனரை முகத்தில் தடவினால் தான் சருமம் இறுக்கமாகும். உங்கள் சருமத்துக்கு ஏற்ற டோனரைத் தொடர்ந்து தடவி வந்தால் முகத் தசைகள் தொய்ந்து போகாது. உங்கள் இளமையும் உங்களை விட்டுப் போகாது.

அடுத்தது மாய்ஸ்ரைசிங் க்ரீம். இதுதான் நம் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் நண்பன். இந்த ஈரப்பதம்தான் நம் இளமையைத் தக்க வைக்கிறது சிலர் 40 வயதிலும் 20 வயது இளைமையுடன் தெரிவது இதனால்தான்!

வறண்ட சருமம் உள்ளவர்கள் ஆயில் பேஸ்டு க்ரீம்களை பயன்படுத்தித் தான் மேக்கப் போட வேண்டும். ஆயில் ஃப்ரீ க்ரீம்களையோ அல்லது டிரை பவுடரையோ கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. சிலருக்கு எப்போதும் அதிகமாக வியர்க்கும். இவர்கள் முகத்துக்கு ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்து விட்டு, மேக்கப் போட்டால் வியர்வையினால் மேக்கப் கலையாது. மேக்கப் உங்கள் முகத்தில் எரிச்சலை ஏற்படுத்தினால் உடனடியாக முகத்தை வாஷ் பண்ணி விடுங்கள்.

Trendylife

ஒரு தடவை மேக்கப் செய்தால் அதை நான்கு மணி நேரம் வரைதான் வைத்திருக்க வேண்டும். அதற்கு மேல் வைத்திருந்தால் மேக்கப் பொருட்களிலுள்ள கெமிக்கல்ஸ் சருமத்தினுள்ளே இறங்கி விடும். அதனால் நாள் முழுவதும் மேக்கப்புடன் இருக்க வேண்டுமென்றால், நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை ஏற்கனவே போட்ட மேக்கப்பை கலைத்து விட்டு அரைமணி நேரம் கழித்து மறுபடியும் மேக்கப் போட்டுக் கொள்ளுங்கள். இப்படி செய்தால் மேக்கப்பினால் சருமம் பாதிக்காது.

உங்கள் சரும நிறத்துக்கு ஏற்ற பவுண்டேஷன், கன்சிலர், காம்பேக்ட் பவுடர் போன்றவைகளை டெஸ்டர் மூலம் போட்டுப் பார்த்துத் தேர்ந்தெடுங்கள். அப்போதுதான் மேக்கப் போட்டாலும் அது முகத்தில் தனியாகத் தெரியாது. லிப்ஸ்டிக் மேல் லிப் கிளாஸை அதிகமாகப் போடாதீர்கள். இதனால் லிப்ஸ்டிக் உதட்டிலிருந்து வழிந்து கசியும்! மேக்கப் பிரஷ்ஷை ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் கண்டிப்பாக க்ளீன் செய்து விடுங்கள்.

மேக்கப் செய்யும் போது கண்களையோ அல்லது உதடுகளையோ லைட்டாகும் படி மேக்கப் செய்யுங்கள். உதாரணத்துக்கு, கண்களின் மேல் டிரஸ்சுக்கு மேச்சாக டார்க் கலரிலோ அல்லது மினுமினுப்பாகவோ ஐ ஷேடோ போட்டால், உதடுகளுக்கு லைட் கலரில் லிப்ஸ்டிக் போடுங்கள்.

கன்சிலரை அள்ளிப் பூசி கண்களின் கருவளையத்தை மறைக்கப் பார்க்காதீர்கள். கன்சிலர் ஓரளவுக்குக் கருவளையத்தை மறைக்குமே தவிர, அதைச்சரி செய்யாது. இதற்கு சிலிகான் கலந்த மேக்கப் சாதனங்களைத்தான் பயன்படுத்த வேண்டும். பெரிய கண்களை உடையவர்கள், ஐலைனரைத் தவிர்த்து, மை மட்டும் போட்டுக் கொள்ளலாம். சிறிய கண்களை உடையவர்கள் ஐலைனரை இரண்டு தடவை போடலாம். கண்கள் பெரிதாக அழகாகத் தெரியும்Trendylife.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker