அழகு..அழகு..புதியவை

சரும பொலிவு தரும் கற்றாழை

உங்கள் சரும பிரச்சனைகள் அனைத்திருகுமான அருமருந்தாக கற்றாழை விளங்குவதை இப்போது புரிந்து கொண்டிருக்கலாம். இந்த அருமையான பொருளை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ளவும் ஆர்வம் ஏற்பட்டிருக்கும். கற்றாழையை பயன்படுத்தக்கூடிய மூன்று வழிகளை அறிந்து கொண்டு, அதை உங்கள் சரும நல முறையில் சேர்த்துக்கொண்டு, மாசு மருவில்லா பொலிவான சருமத்தை பெறுவது எப்படி? என அறிந்து கொள்ளுங்கள்.

செடியில் இருந்து இயற்கை கற்றாழையை எடுத்துக்கொள்ளுங்கள்
கற்றாழை இலை இன்றை கத்திரித்து, அதன் முள்களை நீக்கிவிட்டு அதன் சாற்றுப்பகுதியை முகத்தின் பக்கவாட்டில் பூசிக்கொள்ளவும். செடியில் இருந்து கத்தியை கொண்டும் கொஞ்சம் சாற்றை அகற்றி பயன்படுத்தலாம். இரண்டு இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு போதுமானது. தேவை எனில் இன்னும் கொஞ்சம் எடுத்துக்கொள்ளலாம். இதில் கொஞ்சம் பாதாம் எண்ணெய் சேர்த்து முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் இரவு படுக்கச்செல்லும் முன் தடவிக்கொள்ளவும். இரவு அப்படியே விட்டு விட்டு காலை எழுந்ததும் கழுவிக்கொள்ளவும்.

நீங்களே செய்யக்கூடிய ஆலோவேரா பேஸ் மாஸ்க்
எண்ணெய் பசை/ கலைவயான தன்மை கொண்ட சருமத்திற்கு: எண்ணெய் பசை மிக்க சருமம் எனில், உங்கள் சருமத்தில் இருந்து கூடுதல் எண்ணெயை, பருக்களை அகற்ற உதவும் கற்றாழை மாஸ்க் இது. ஒரு கோப்பையில் கற்றாழை சாற்றை எடுத்துக்கொள்ளவும். அதில் 10 முதல் 12 சொட்டு டீ டிரி ஆயில் விடவும். இதை நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை இரவு படுக்கச் செல்லும் முன், முகத்தில் பூசிக்கொண்டு, காலையில் கழுவிக்கொள்ளவும். வாரம் ஒரு முறை இவ்வாறு பயன்படுத்தவும்.

Trendylife

உலர் சருமத்திற்கான கற்றாழை
உலர் சருமத்திற்கு: உலர் மற்றும் மங்கலான சருமத்தை மென்மையான சருமமாக மாற்ற, கற்றாழை, தேன் மற்றும் வெள்ளரி கொண்ட பேஸ் மாஸ்கை தயார் செய்யவும். இந்த மூன்று பொருட்களுமே நீர்த்தன்மை அளிக்க கூடியவை. இவற்றை பயன்படுத்தும் போது, சருமம் மென்மையாகி பொலிவு பெறுகிறது. ஒரு வெள்ளரி, ஒரு ஸ்பூன் தேன் மற்றும் கொஞ்சம் கற்றாழையை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை பூசிக்கொண்டு 20 நிமிடம் விட்டு பின்னர் கழுவிக்கொள்ளவும்.

வழக்கமான / எளிதில் பாதிக்கும் சருமத்திற்கு கற்றாழை:
கற்றாழை மற்றும் வாழைப்பழம் மாய்ஸ்சரைசிங் தன்மை மற்றும் பளபள வைக்கும் பேஸ் மாஸ்க். இது எல்லா வகையான சருமத்திற்கும் குறிப்பாக, வழக்கமான, எளிதில் பாதிக்கும் சருமத்திற்கு மிகவும் ஏற்றது. இது சருமத்தை எரிச்சலில் இருந்து விடுவித்து, சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை மேம்படுத்துகிறது. ஒரு கோப்பையை வாழைப்பழத்தை மேஷ் செய்து, 2 ஸ்பூன் கற்றாழை மற்றும் சில தொட்டு பன்னீர் விடவும். இதை நன்றாக கலந்து, முகத்தில் பூசிக்கொள்ளவும். உலர்ந்த பிறகு கழுவிக்கொள்ளவும்.

கற்றாழை பயன்படுத்திய அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்தவும்
உங்கள் சரும நல பராமரிப்பில் கற்றாழையை பயன்படுத்த மற்றொரு வழி, கற்றாழையை மூலப்பொருட்களில் ஒன்றாக கொண்ட அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதாகும். கற்றாழை நலன் கொண்ட, லீவர் ஆயுஷ் ஆலோ வேரா ஆயில் கிளியர் பேஸ் வாஷ் கொண்டு உங்கள் முகத்தை கழுவிக்கொள்ளவும். உங்கள் சருமத்தை சுற்றுச்சூழல் மாசில் இருந்து காக்கும் அதே நேரத்தில், சருமத்திற்கு கற்றாழை மாய்ஸ்சரைசிங் தன்மை அளிக்கும், லாக்மே 9 டூ 5 நேச்சுரலே லாஓ வேரா அக்வா ஜெல் சாதனத்தை பயன்படுத்துங்கள். கற்றாழையின் நற்குணங்கள் மற்றும் நாள் முழுவதும் யுவி கதிர்களில் இருந்து எஸ்.பி.எப் 20 பாதுகாப்பு அளித்து சருமத்தை நீர்த்தன்மையுடன் வைத்திருக்கும் சாதனத்தையும் நீங்கள் பயன்படுத்தலாம். உலர் மற்றும் கோடுகள் கொண்ட உதடுகளூக்கு வாசெலின் ஆலோ வேரா லிப் பாம் பயன்படுத்தவும். வெளியே பருவநிலை எப்படி இருந்தாலும் உதடுகளை மென்மையாக வைத்திருக்க இது உதவுகிறது. நீங்கள் மிகுந்த அவசரத்தில் இருந்தால், உங்கள் சரும நல பராமரிப்பில் கற்றாழையை சேர்த்துக்கொள்வதற்கான வீடியோ வழிகாட்டியும் இருக்கிறது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker