சமையல் குறிப்புகள்புதியவை
வீட்டிலேயே செய்யலாம் ஹாட் சாக்லேட் மில்க்
முதலில் பாலை நன்றாக காய்ச்சி ஆற வைத்துக்கொள்ளவும். அகன்ற கிண்ணத்தில் சிறிதள்வு பாலை ஊற்றி அதனுடன் சர்க்கரை, பட்டை தூள், கோகோ பவுடர் ஆகியவற்றை போட்டு கட்டி பிடிக்காமல் நன்றாக அடித்து கலக்கி வைத்துக்கொள்ளவும்.
இந்த கலவையை அடுப்பில் வைத்து சூடுபடுத்திக்கொள்ளவும். அதேபோல் மீதமிருக்கும் பாலையும் கொதிக்க வைக்கவும். பால் கொதிக்க தொடங்கியதும் இறக்கி சாக்லேட் கலவையுடன் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நுரை வரும்வரை அடித்து கலக்கி பரிமாறலாம்.
சூப்பரான ஹாட் சாக்லேட் மில்க் ரெடி.
தேவையான பொருட்கள் :
கோகோ பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்
நாட்டு சர்க்கரை தூள் – 2 டேபிள்ஸ்பூன்
கெட்டியான பால் – 1 கப்
லவங்க பட்டை தூள் – சிறிதளவு