ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

தொற்றில் இருந்து மீண்டாலும் கை, கால், மூளையில் ரத்தத்தை உறைய வைக்கும் கொரோனா

கொரோனா வந்து சென்ற பிறகு ஏற்படும் பக்க விளைவுகளை கேட்டால் உறைய வைக்கிறது!!அதாவது பாதிப்பை விட குணம் அடைபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். எனவே கொரோனாவை நினைத்து அச்சப்பட தேவை இல்லை. ஒருமுறையாவது குணமானால் உடலில் எதிர்ப்பு சக்தி வந்துவிடும். அதன் பிறகு கவலை இல்லை. எனவே எத்தனை நாளைக்கு தான் பயந்து முடங்கி கிடப்பது? கொரோனாவோடு வாழப் பழகி கொள்வோம் என்ற எண்ணத்துக்கு அரசும் வந்துவிட்டது. மக்களும் வந்துவிட்டனர்.

அதனால்தான் கொரோனாவை விட வேகமாக இயல்பு வாழ்க்கை திரும்பி கொண்டிருக்கிறது.இந்த கணிப்பும், முடிவும் சரிதானா…? இல்லை. நிச்சயமாக இல்லை.

ஜப்பானில் அணுகுண்டு வீச்சில் அந்த கணமே செத்தவர்களைவிட அதன்பிறகு ஏற்பட்ட பாதிப்புகளால் தினம் தினம் செத்துக் கொண்டிருப்பவர்கள்தான் ஏராளம்.அதே போல்தான் கொரோனா தாக்கிவிட்டு சென்ற பிறகு ஏற்படும் பல பக்க விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்று டாக்டர்கள் சொல்லும் தகவல்கள் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது.முகப்பேரில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் மி‌ஷன் ஆஸ்பத்திரிக்கு கடந்த சில நாட்களில் வந்த சில நோயாளிகளிடம் இருந்து டாக்டர்கள் பார்த்த சில நோய்கள் அவர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய ஒரு நோயாளி கை வலி தாங்க முடியவில்லை என்று வந்திருக்கிறார்.அவரை ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் எஸ்.சரவணன் பரிசோதித்து பார்த்தபோது கையில் உள்ள ரத்த நாளத்தில் ரத்தம் உறைந்து இருப்பதை கண்டுபிடித்தார்.

மருத்துகளால் கரைக்க முடியாத நிலை உருவானதும் ஆபரே‌ஷன் மூலம் ரத்த நாளத்துக்குள் உறைந்திருந்த ரத்த கட்டியை அகற்றி இருக்கிறார். அதன் பிறகு சீராக அந்த நோயாளி குணம் அடைந்து விடு திரும்பி இருக்கிறார்.இது அரிதாக வரவில்லை. இதேபோல் 7 கேசுகளை டாக்டர் சரவணன் பார்த்துள்ளார்.

அவர்களின் கால், கைகளில் இதேபோல் உறைந்த ரத்த கட்டியை அகற்றி குணப்படுத்தி இருக்கிறார்.

லண்டனில் ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணராக பல ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் வாய்ந்த டாக்டர் சரவணன், கொரோனா வைரஸ் தாக்கத்தின் அடுத்த கட்டம் உடலில் உள்ள உறுப்புகளில் ரத்தம் உறைதல் என்ற மோசமான நிலைக்கு கொண்டு செல்வதாக எச்சரிக்கிறார்.கொரோனா வைரஸ் இப்போதுதான் நம் நாட்டில் அதிகமாக பரவி வருகிறது

குணம் அடைந்து ஓரிரு வாரங்களுக்கு பிறகுதான் இந்த பிரச்சினை வருகிறது. பொதுவாக மனித உடலில் இருந்து ரத்தம் வெளியேறினால்தான் உறையும் தன்மை பெறும்.ஆனால் இந்த வைரஸ் தாக்கத்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் உடல் உறுப்புகளில் ரத்தத்தை உறைய வைத்து விடுகிறது.கால், கை, மூளை நரம்புகளில் ரத்தம் உறைதல் நிகழ்கிறது. இதனால் கால், கை, கடுமையாக வலிக்கும். மரத்து போகும் உணர்வு ஏற்படும். உடனே ரத்த நாளம் தொடர்பான மருத்துவர்ளை அணுகி விட வேண்டும். கண்டு கொள்ளாமல விட்டால் ரத்த ஓட்டம் தடைபட்டு காலோ, கையோ அழுகும் நிலை ஏற்படும். அதன்பிறகு துண்டிப்பதை தவிர வழியே கிடையாது.

நான் சிகிச்சை அளித்த 7 நோயாளிகளையும் சோதித்த போது உறைந்திருந்த ரத்தம் வழக்கமாக ரத்த நாளங்களில் உறையும் ரத்தத்தை விட மிகவும் அடர்த்தியாக இருந்தது. மருந்துகளால் கரைக்க முடியவில்லை. எனவே அறுவை சிகிச்சை மூலம் அகற்றினேன்.

கொரோனா வைரஸ் தொற்றியதால் உடலில் ஏற்பட்ட அதிகமான எதிர்ப்பு தன்மை மற்றும் உடலுக்குள் வைரஸ் இருக்கும் போது அது பெருகாமல் இருப்பதற்காக அதை சுற்றி உருவாகும் ‘பைபர்’ காரணமாக இவ்வாறு ரத்தம் உறையலாம் என்பது கருதப்படுகிறது.

அமெரிக்காவில் இந்த மாதிரி கொரோனாவில் இருந்து மீண்டு கை, கால்களை பலர் இழந்து இருக்கிறார்கள்.மூளையில் ரத்தம் உறைந்தால் கால், கை செயலற்றுவிடும்.

கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் நுரையீரலை கண்காணிப்பது மட்டுமல்ல. இந்த மாதிரி ரத்த உறைவதால் கை, கால்களில் வலி ஏற்பட்டாலோ, மரத்துப்போனாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அறிகுறி தெரிந்த 4 முதல் 24 மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால் உறுப்புகளை காப்பாற்றிவிடலாம்.

சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் இருப்பவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு மீண்டாலும் அவர்களுக்கு இந்த மாதிரி ரத்தம் உறைதல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே கவனம் தேவை.

பாழாய் போன கொரோனா வந்திட்டு போனாலும் விடாது போலிருக்கே… கேட்டாலே மனதை உறைய வைக்கிறதே!

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker