ஆரோக்கியம்புதியவை

அஜீரணம் உடலில் ஏற்படுத்தும் பிரச்சனைகள்

அஜீரணம் எனப்படுவது, உணவு செரிமானமின்மையை குறிக்கும். இது கபத்தால் ஏற்படுகிறது. செரிக்கும் ஆற்றல் மந்தமாக உள்ளதால், உணவைச் செரிக்க அதிக நேரம் தேவைப்படும். சாப்பிடாவிட்டாலும் பசி எடுக்காது. இதனுடன் சளி, ஜலதோஷம் காணப்படலாம். எச்சில் அதிகமாக ஊறும். ரத்த ஓட்டம் குறையும். கால்நீர், உடல் எடை, கொழுப்பு, நீரிழிவு நோய், சோம்பேறித்தனம் போன்றவையும் ஏற்படும். நாக்கில் வெண்மை நிறம் வெளிப்படும்.

எளிதான உணவுகளை உட்கொள்ளத் தோன்றும். வாந்தி எடுக்கும் உணர்வு ஏற்படலாம். வயிற்றில் கனத்தன்மை காணப்படலாம். கை, கால்களில் கனத்தன்மையும் சோர்வும் காணப்படும். மனது மந்தமாகவும், உற்சாகக் குறைவும் ஏற்படும். வாழ்க்கையில் உற்சாகம் குறையும்.

குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடுவது, தரமற்ற உணவுகளைச் சாப்பிடுவது, அதிகமாகச் சாப்பிடுவது, தவறான முறையில் சாப்பிடுவது, தூக்கத்தில் வேறுபாடு, இயற்கை செயல்பாட்டு வேகத்தை கட்டுப்படுத்துவது, அதிகமான காம இச்சை, சந்தேகப்படுவது, வருத்தம் போன்றவை அஜீரணத்தை ஏற்படுத்தலாம்.

அதிகமாக மருந்துகளை சாப்பிடுவது, சோக நிலை, கல்லீரல் சரியாக வேலை செய்யாமலிருப்பது, வலி நிவாரணிகளை தவறாக பயன்படுத்துவது, மனச் சோகம் ஆகியவற்றாலும் இது வருகிறது.

கபம் அதிகமாக இருப்பவர்களுக்கு பொதுவாக பசி ஏற்படுவதில்லை. அவர்களுக்கு பசியை தாங்கும் சக்தி உண்டு. இதற்கு கார்ப்பு சுவையுடைய உணவு வகை நல்லது. சுக்கு, மிளகு, திப்பிலி உள்ளிட்ட வெப்பமான மருந்துகள் நல்ல பலன் அளிக்கின்றன.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker