ஆரோக்கியம்புதியவை

வயிற்றுக்குள் இருக்கும் காற்றை வெளியேற்றி தொப்பையை குறைக்கும் மூச்சுப்பயிற்சி

சுவாசப் பிரச்சினைகள், அதிக உடல் எடை, மூச்சுத் திணறல் ஆகிய பிரச்சினைகளாலும் உடல் பருமன் கொண்டவர்கள் சுவாசப் பயிற்சி மூலமாக இந்த பிரச்சினைகளை எல்லாம் எளிதாகக் கடந்து விட முடியும். நாம் அனைவரும் மேலோட்டமான சுவாசங்களை மட்டுமே எடுத்துக் கொள்கிறோம், இதன் காரணமாக நமது நுரையீரல் அவற்றின் சிறந்த திறனுடன் செயல்படாது, இது நமது மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

முறையாக சுவாசிக்காமல், காற்றை ஏனோதானோவென்று உள்ளிழுத்து, வெளியேற்றுவதால் வயிற்றுக்குள் காற்று தங்கிவிடுகிறது. அப்படி தங்கிவிடும் காற்றினால் தொப்பை, உடல் பருமன் போன்ற பிரச்சினைகளும் உண்டாகின்றன. ஆழ்நத சுவாசம் இல்லாதது நிறைய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஆழ்ந்த சுவாசம் உங்கள் உடலில் மன அழுத்தத்தை குறைக்க ஒரு சிறந்த வழியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.அது மட்டுமல்லாமல், நீங்கள் ஆழ்ந்த சுவாசத்தை பயிற்சி செய்யும்போது, அது உண்மையில் உங்கள் மூளையை ரிலாக்ஸ் செய்கிறது . எனவே இந்த சுவாச பயற்சி செய்வது என்று தீர்மானியுங்கள்.

உட்கார்ந்த இடத்திலேயே செய்யும் பயிற்சிகள் நிறைய இருக்கின்றன. மூச்சுப்பயிற்சியும் அப்படி செய்யலாம். ஆனால் எடையைக் குறைக்க நீங்கள் மூச்சுப்பயிற்சி செய்வதாக இருந்தால் தரையில் அமர்ந்து தான் செய்ய வேண்டும். மூச்சுப் பயிற்சியை செய்கின்றபோது தரையில் அமர்ந்து முதுகை நேராக வைத்து உட்காருங்கள். ஆனால் நீங்கள் நிமிர்ந்து உட்கார முயலுங்கள்.

முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி உட்கார வேண்டும். முதலில் வாயை மூடிக் கொண்டு மூக்கின் வழியாக 4 விநாடிகள் சுவாசிக்க வேண்டும். அடுத்து 7 விநாடிகள் என்று ஆக்கிக் கொண்டு சுவாசியுங்கள். உங்களை நீங்கள் அழுத்திக் கொள்ளாமல் லேசாக செய்யுங்கள். அடுத்து 8 விநாடிகள் வாயின் வழியாக சுவாசிக்கவும். இப்படி குறைந்தபட்சம் 3 முறை செய்யவும். அடுத்தடுத்து நீ்ங்கள் சௌகரியமாக உணர ஆரம்பித்ததும் இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

இரண்டு கால்களையும் மடக்கி, பத்மாசனத்தில் அமருங்கள். ஆழ்ந்த சுவாசப் பழக்கத்தை உண்டாக்க இது ஒரு படிப்படியான பயிற்சியாக இருக்கும். இந்த அடிப்படை பயிற்சியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முழு பிராணாயாமம் செய்யுங்கள்.

அதிக நன்மைகளைப் பெற வேண்டுமானால் மாற்று நாசி மூச்சு போன்ற சுவாச பயிற்சிகளையும் நீங்கள் சேர்க்கலாம்.

ஆழ்ந்த சுவாசம் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்ததாக அமையும். உங்களை மிகவும் ரிலாக்ஸாக வைத்திருக்க உதவும்.

நாள் முழுவதும் உங்களைச் சுறுசுறுப்பாக செயல்பட உதவும். இந்த சுவாச பயிற்சியை தினமும் செய்து மனதையும் உடலையும் உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இதய நோயாளிகள் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உள்ளவர்கள் சுவாசப் பயிற்சி செய்வது மிக மிக முக்கியம்.

இந்த பயிற்சியைச் செய்வதன் மூலம் மார்பு சுருங்கி விரியும். இந்த மார்பு விரிவாக்கத்தால் ஏற்படுகின்ற மூச்சுத் திணறல் போன்றவை மார்புக் குறைபாடு ஆகியவற்றுடன் குறுகிய சுவாசத்திற்கு வழிவகுக்கும். சுவாசக் கோளாறினால் அதிகமாக பாதிக்கப்படுவது நிச்சயமாக உங்ளுடைய நுரையீரலையும் இதயத்தையும் தான். அதனால் சுவாசப் பயிற்சியை தினசரி மேற்கொள்ளுங்கள். அதற்கான ஏதோ செய்ய வேண்டுமென்று செய்யக் கூடாது. முறைப்படி தெரிந்து கொண்டு செய்தால் அது சரியான பலனைக் கொடுக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker