சமையல் குறிப்புகள்புதியவை
எலும்புகளுக்கு வலிமை தரும் பாதாம் பேரிச்சம்பழ பானம்
பாதாம் பருப்பு மற்றும் பேரிச்சம் பழத்தினை முதல் நாள் இரவே ஊறவைத்து கொள்ளவும்.பசும் பாலை நன்றாக காய்ச்சி வைக்கவும். அடுத்த நாள் காலை மிக்ஸியில் பாதாம் பருப்பு, பேரிச்சம்பழம், மஞ்சள் தூள், ஏலக்காய் தூள், நெய், சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அடுத்து தேங்காய்ப் பாலுடன் பசும் பாலினைக் கலந்து இதனை அரைத்து வைத்த பேஸ்ட்டுடன் கலக்கவும். அடுத்து அதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து பிரிட்ஜில் வைத்துக் குடிக்கவும்.
சூப்பரான சத்தான பேரிச்சம்பழ பானம் ரெடி.
தேவையான பொருட்கள்
பாதாம் பருப்பு – 10
பேரீச்சம் பழம் – 5
பசும் பால் – 1 கப்
தேங்காய்ப் பால் – கால் கப்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
ஏலக்காய் – 1/8 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
நாட்டுச் சர்க்கரை – 1 டீஸ்பூன்
பாதாம் பேரிச்சம்பழ பானம்