ஆரோக்கியம்புதியவை

பெண்களுக்கு உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தும் ஜீன்ஸ்

காதலி, பேண்ட் அணியும் தனது காதலனிடம் ‘உங்களுக்கு ஜீன்ஸ் போட்டால் நன்றாக இருக்கும். அடுத்த முறை நாம் சந்திக்கும்போது நீங்கள் ஜீன்ஸ் அணிந்துவரவேண்டும்’ என்று அன்புக்கட்டளை விடுத்த காலம் அப்படியே தலைகீழாக மாறியது. காதலர்கள், தங்கள் காதலியும் ஜீன்ஸில் கம்பீரமாக வலம் வரவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அவர்களுக்கு ஜீன்ஸ் வாங்கிக்கொடுத்து, போட்டுக் கொள்ள சொல்லி அழகு பார்த்தார்கள். இப்படி இருபாலரும் மாறி மாறி அணியும் நிலை வந்ததால் ஜீன்ஸ் இப்போது வீதி எங்கும் கோலாச்சிக்கொண்டிருக்கிறது.

பெண்களின் உடலை உரிமையோடு இறுக்கிப்பிடிக்கும் இந்த உடை, நாகரிகத்தின் அடையாளமாகவும் ஆகிவிட்டது. அதுமட்டுமில்லை, பெண்கள் பஸ்களில் ஏறி-இறங்கவும், வாகனங்களை இயக்கவும் ஜீன்ஸ் சவுகரியமாக இருக்கிறது என்பது அனேகமானவர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனாலும் ஜீன்ஸ் அணிவது பெண்களுக்கு பல்வேறு விதத்தில் உடல்நல கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

உணவுப் பழக்கமும், உடை அணியும் வழக்கமும் ஒவ்வொரு நாட்டு சீதோஷ்ணநிலை மற்றும் வாழ்வியல் சூழலோடு தொடர்புடையது. அவை குளிர்நாடுகளுக்கு ஒரு மாதிரியாகவும், உஷ்ண நாடுகளுக்கு இன்னொரு மாதிரியாகவும் இருக்கும்.

இந்தியா உஷ்ணமான நாடு. இங்கு நாம் அணியும் உடைகள் எல்லாமே உஷ்ணத்தை குறைக்கும் விதத்தில் தான் இருக்கவேண்டும். அதனால்தான் மென்மையான, தளர்வான உடைகளை இந்திய பெண்கள் அணியவேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஜீன்ஸ் குளிர் நாடுகளுக்காக உருவாக்கப்பட்ட உடை. அது உடல் உஷ்ணத்தை அதிகரிக்க தயார் செய்யப்பட்ட உடையாகும். மேற்கத்திய நாட்டினர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள உடையை இங்குள்ளவர்களும் அணிகிறார்கள். அது உடலை இறுக்கிப் பிடித்து காற்றோட்டம் இல்லாத நிலையை உருவாக்குவதால், அதை அணியும் பெண்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகிறார்கள்.

இந்தியா போன்ற உஷ்ணநாடுகளை சேர்ந்தவர்கள் ஜீன்ஸை அணிவதாலும், தொடர்ச்சியாக அதிக நேரம் அணிவதாலும் ஜீன்ஸ் அணிபவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

‘டைட் ஜீன்ஸ்’ அணியும் ஆண்களுக்கு உயிரணு உற்பத்தி விரைவாக குறைகிறது. ஜீன்ஸ் அவர்களுடைய விரைப்பைகளை இறுக்கிப்பிடிப்பது தான் அதற்கான காரணம்.

கீழ் வயிற்றிலிருந்து மேல் நோக்கிச் செல்லும் மிகவும் நுட்பமான நரம்பு அழுத்தப்படுவதால் அஜீரணம், நெஞ்சு எரிச்சல், மூட்டுக்களில் வலி, மரத்துப் போதல் போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.

பெண்கள் டைட் ஜீன்ஸ், ஹைஹீல்ஸ் செருப்பு அணிந்து நடப்பதால் முதுகு வலியும், கழுத்து வலியும் ஏற்படுகிறது. அவர்களது இனப்பெருக்க உறுப்புகளும் அழுத்தத்தால் பாதிக்கப்படுவதால் பெண்கள் அதிக நேரம் ஜீன்ஸ் அணிவதை தவிர்க்க வேண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker