இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைத்தாலும் சில தீமைகளும் அதில் இருக்கத்தான் செய்கிறது. தற்போதைய சமூகத்தில் இணையம் என்பது எல்லோருக்கும் தேவையான ஒன்றாகி விட்டது. சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இணையத்தில் அடிமையாக இருக்கிறார்கள். அந்த வகையில் மிகவும் சர்ச்சைக்குரிய விஷயம் என்னவென்றால் ஆபாச படங்களை பார்ப்பது இன்னும் தடை செய்யப்படாத ஒன்றாகவே உள்ளது. அதற்கு சில அடிமையாகி விடுவதும் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆபாசப் படங்கள்
பெண்கள் ஆபாசங்களை பற்றி பேசுவது கூட இங்கே தவறானதாக கருதப்படுகிறது. ஆனால் தினமும் ஆபாச தளத்திலேயே மூழ்கி இருப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் ஆபாச படங்களை பற்றி பார்க்க அதிக நேரம் செலவிடுகின்றனர். அதற்கு அடிமையாகவும் இருக்கின்றனர் என்கிறார்கள் பாலியல் மருத்துவர்கள். நிறைய பேருக்கு ஆபாச படங்களை பார்ப்பதில் தாங்கள் அடிமையாக இருப்பதே தெரிவதில்லை. எனவே உங்களுக்கு ஆபாச படங்களை பார்க்கும் பழக்கம் இருந்தால் தென்படும் அறிகுறிகளை வைத்து அதில் நீங்கள் அடிமையாக உள்ளீர்களா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
ஆய்வு செய்தல்
சமூகவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வேடிக்கையாக ஆபாசத்தைப் பார்ப்பது அல்லது நீங்கள் சுதந்திரமாக இருக்கும்போது பார்ப்பது ஒன்றும் அவ்வளவு மோசமான யோசனை அல்ல என்கிறது. உண்மையில், அவ்வாறு செய்வது மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிடுவதன் மூலம் அழிக்க உதவுகிறது.
ஆனால் ஆபாச படங்களை எவ்வளவு நேரம் பார்க்கிறீர்கள் என்பதில் தான் சிக்கல் இருக்கிறது. பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி வாரத்திற்கு 4 மணி நேரம் ஆபாசத்தை பார்ப்பது பரவாயில்லை என்கின்றனர். ஆனால் அதற்கு மேல் அடிக்கடி பார்ப்பது அதில் நீங்கள் அடிமையாக உள்ளதை காட்டுகிறது.
அதிகமாக ஆபாசம் படம் பார்ப்பதால் ஏற்படும் தீங்குகள்
அதிகப்படியான ஆபாசத்தை பார்ப்பது உங்க மன ஆரோக்கியத்திற்கும், உறவிலும் சிக்கலை உண்டாக்கும். உண்மையில் பல சந்தர்ப்பங்களில் அதை அதிகமாக பார்ப்பது உங்களுக்கு நம்பத்தகாத எதிர்ப்பார்ப்புகளுக்கு வழி வகுக்கும். இது உங்களுக்கும் உங்க கூட்டாளருக்கும் மிக மன அழுத்தத்தை உண்டாக்கும்.
சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் பொது சுகாதார இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, அதிகப்படியான ஆபாசங்களைப் பார்ப்பது மற்றும் அடிக்கடி சுயஇன்பம் செய்வது பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் பாலியல் செயலிழப்புக்கு அது வழிவகுக்கும்.
நடத்தை மாற்றங்களுக்கு வழி வகுக்கும்
இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஹெல்த் சயின்ஸில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, அதிகப்படியான ஆபாசத்தைப் பார்ப்பது உங்களுக்கு நடத்தை மாற்றங்களுக்கு வழிவகுக்கும். அது உங்களையும் உங்க உறவையும் பாதிக்கும்.
சாதாரணமாக இருந்து திடீரென ஆபாசப் படங்கள் அதிகமாகப் பார்ப்பவர்களின் எண்ணங்கள் அதிக நேரம் அந்த விஷயங்களைச் சுற்றியே இருக்கும். வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். குறிப்பாக, எந்த ஒரு வேலையையும் முழு மனதாகச் செய்ய முடியாது. நினைக்கும்போது அதைப் பார்க்காவிட்டால், திடீரென கோபம் கூட வரும். அது நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் சேர்த்தே பாதிக்கும். இதுபோன்ற நடத்தை மாற்றங்கள் சில சமயங்களில் நிறைய பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.
அளவோடு பார்ப்பதற்கான டிப்ஸ்கள்
ஆபாசப் படங்களை பார்ப்பது தவறில்லை. ஆனால் அதை எப்போது நிறுத்த வேண்டும் என்பது தெரிந்து இருக்க வேண்டும்.
அதிகப்படியான ஆபாச படங்களை பார்ப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் குறைவான பாலியல் உறவை கொண்டு இருப்பார்கள்.
நீங்கள் ஒரு உறவில் இருந்தால் உங்க துணையுடன் சேர்ந்து ஆபாச படங்களை பார்க்க முயலலாம். நீங்கள் பார்ப்பதை பற்றி அவருடன் விவாதிக்கலாம். இது உங்க உறவை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றும்.
நீங்கள் எப்போதும் ஆபாச படங்களை பார்ப்பது போன்று உணர்ந்தால் தேவைப்படும் இடங்களில் அதை சிவப்புப் கொடி காட்டி நிறுத்தவும் தெரிந்திருக்க வேண்டும்.
ஆபாசத்தை அளவோடு பார்ப்பது ஆரோக்கியமான ஒன்று தான். உண்மையில் அதை நீங்கள் மிகைப்படுத்தாத வரை உங்க மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காக ஆபாசத்தைப் பார்ப்பது நல்லது.
எனவே எதுவாக இருந்தாலும் அதற்கு அடிமையாகாமல் அளவோடு பயன்படுத்துவது நன்மை என்று பாலியல் மருத்துவர்கள் கூறியுள்ளனர்