புதியவை

அனைத்து வகையான கூந்தல் பிரச்சனைக்கும் தீர்வு தரும் செம்பருத்தி

நமது ஊர்களில் பலபேர் வீடுகளின் முன்பு சாதாரணமாக செம்பருத்தி செடி வளர்ந்து இருப்பதை பார்த்து இருப்போம். நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு இந்தப் பூவில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

இதன் மருத்துவ குணத்தை அறிந்த சித்தர்கள் செம்பருத்திப்பூவை “தங்கபஸ்பம்” என்ற பெயர்கொண்டு அழைத்து வந்தனர். செம்பருத்திப் பூவின் மருத்துவ குணத்தை பற்றி மேலும் நாம் அறிந்து கொள்வோம்.

தோல் நோய் வராமல் பாதுகாக்க காயவைத்த செம்பருத்தி இதழ்களுடன், ஆவாரம்பூ பாசிப்பயிறு, கருவேப்பிலை இவைகளைச் சேர்த்து பொடியாக்கி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். தினம்தோறும் குளிப்பதற்கு, சோப்புக்கு பதிலாக இந்த தூளை உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் தோல் நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். இதன் மூலம் நம் சருமமும் பளபளப்பாக இருக்கும்.

சிலருக்கு இளநரை, பொடுகு தொல்லை, முடி உதிரும் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். செம்பருத்திப்பூ இலைகளுடன் கருவேப்பிலை, மருதாணி இலை இவற்றை சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்து பின்பு குளிக்க வேண்டும். இதேபோன்று வாரத்திற்கு 2 முறை செய்துவந்தால் தலைமுடி பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். இப்படி செய்து வரும்போது நம் கண்களும், உடலும் குளிர்ச்சி அடையும். உடம்பில் உள்ள சூடு தன்மை குறையும்.

அதிக தலைமுடி உள்ளவர்களுக்கு பேன் ஈறு தொல்லை அதிகமாக இருக்கும். அப்படி உள்ளவர்கள் இரவில் தூங்கும் போது செம்பருத்திப் பூவை தலையில் வைத்துக்கொண்டு அப்படியே படுத்து உறங்கலாம். நம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க 2, 3 செம்பருத்திப் பூக்களை நீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு டம்ளர் அளவு நீரில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் ரத்த சோகை நீங்கும்.

இயற்கையான மருத்துவ குணம் கொண்ட செம்பருத்தி செடி இனத்தை அழியாமல் எப்போதும் பாதுகாப்போம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker