கூந்தல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் யோகாசனங்கள்
கூந்தலின் நிலையை வைத்தே நம்முடைய தினசரி அட்டவணை எப்படி இருக்கிறது என சொல்லிவிடலாம். இத்துடன், மன அழுத்தம், மோசமான வாழ்வியல் தேர்வுகள், மரபணு, மருந்துகள், ஹார்மோன் சமநிலையின்மை, கூந்தலில் அதிக அளவில் ரசாயன பயன்பாடு ஆகியவை சேரும் போது, கூந்தல் மேலும் பாதிக்கப்படுவதில் வியப்பில்லை. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தோடு யோகா தோற்றத்தையும் மேம்படுத்தும். “ஒரு சில யோகாசனங்கள் உச்சந்தலை, மயிர்க் கால்களுக்கான ரத்த ஓட்டத்தை சீராக்கி, கவலை, மன அழுத்தத்தை போக்கி, கூந்தல் நலனையும் மேம்படுத்துகிறது” என்கிறார் ஹோலிஸ்டிக் ஹெல்த் வல்லுனர் மிக்கி மேத்தா.
உஸ்த்ராசனா
1 தரையில் முட்டி போட்டு, நன்றாக நிமிர்ந்து நிற்கவும்.
2 பின் பக்கம் வளைந்து, மேற் கூரையை பார்த்தபடி பாதங்களை பிடித்துக் கொள்ளவும்.
3 சில நொடிகள் இதே போசில் இயல்பாக மூச்சு விட்டபடி இருக்கவும்.
4 மூச்சை இழுத்து விட்டு ஆரம்ப நிலைக்கு வரவும்.
5 நான்கு அல்லது ஐந்து முறை செய்து ரிலாக்ஸ் ஆகவும்.
உத்தானசனா
1 கட்டைவிரல் உள்பட பாதங்கள், குதிகால், முழங்கால் ஒன்றோடு ஒன்று ஒட்டுக் கொண்டிருக்கும் வகையில் கால்களை அருகாமையில் வைத்தபடி நேராக நிற்கவும்.
2 மூச்சை இழுத்துக் கொள்ளவும், வெளியே விடும் போது கைகளை மேலே தூக்கி கைவிரல்கள், உள்ளங்கை தரையில் படும் வகையில் முன் பக்கம் குனியவும்.
3 இதே போல ஐந்து முறை செய்யவும்.
அதோமுகாசாவனாசனா
1 கைகளை நேராக, தோள்பட்டைக்கு நேர்க்கோட்டில் வைத்தபடி முட்டி மற்றும் உள்ளங்கையில் தாங்கிய படி இருக்கவும்.
2 இப்போது இடுப்பை நகர்த்தி, குதிகாலை தரையில் வைத்தபடி கால்களை நேராக்கிக் கொள்ளவும்.
3 உள்ளங்கையை தரையில் அழுத்தியபடி, உங்கள் முதுகு தண்டை நேராக்கி 5 நொடிகள் இருக்கவும்.
4 இடுப்பை மெதுவாக கீழே கொண்டு வந்து துவக்க நிலைக்கு வரவும். இதே போல மீண்டும் செய்யவும்.