ஹூவாமி பிராண்டு தனது அமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட் ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் ஜூலை 29 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ப்ளிப்கார்ட் மற்றும் அமேஸ்ஃபிட் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 3799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கென ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேக மைக்ரோசைட் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஸ்மார்ட்வாட்ச் டீசர் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது. ஹூவாமி பிராண்டின் அமேஸ்ஃபிட் பிப் எஸ் ஸ்மார்ட்வாட்ச் கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்வாட்ச் இதன் லைட் வெர்ஷன் ஆகும்.
அமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட்
அமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட் சிறப்பம்சங்கள்
– 1.28 இன்ச் 176×176 பிக்சல் ஆல்வேஸ் ஆன் ரிஃப்ளெக்டிவ் டச் டிஸ்ப்ளே
– நோட்டிஃபிகேஷன் வசதி, ஆல்வேஸ் ஆன் கலர் டச் டிஸ்ப்ளே
– 8 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
– ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் சென்சார், டிரை ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்- டிரை ஆக்சிஸ் கைரோ
– ப்ளூடூத் 5, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களுடன் இயங்கும் வசதி
– ஜிபிஎஸ்
– வாட்டர் ரெசிஸ்டண்ட்
– 200 எம்ஏஹெச் பேட்டரி
புதிய பிப் எஸ் லைட் மாடல் தோற்றத்தில் பார்க்க ஒரே மாதிரி காட்சியளிக்கிறது. இதன் எடை 30 கிராம் ஆகும். இதில் எட்டு ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய பிப் எஸ் லைட் மாடல் சார்கோல் பிளாக், ஆக்ஸ்ஃபோர்டு புளூ மற்றும் சகுரா பின்க் நிறங்களில் கிடைக்கிறது.