ஆரோக்கியம்புதியவை

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் இயற்கை மருத்துவம்

நோய் தொற்று காலத்தில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு இயற்கை மருத்துவம் மிக முக்கிய பங்குவகிக்கிறது. மனித இனம் தோன்றியது முதல் தன்னுடைய பிணிகளை போக்க இயற்கை சுழியலுடன் தன் வாழ்க்கையை பிணைத்து கொண்டான். அனைத்து நோய்களுக்கும் இயற்கையில் இருந்து மருந்துகளை கண்டறிந்தான்.

இயற்கை மருத்துவம் என்பது நமது பாரததேசத்தின் இறையாண்மையுடன் பின்னி பிணைந்தது. ஆதிமனிதன் அனைத்து வகை செடி கொடிகளிலிருந்தும், புல், பூண்டுகளிருந்தும், பழங்கள், தானியங்கள் என அனைத்து இயற்கை படைப்புகளிலிருந்தும் மருந்தினை தேடி கண்டுபிடித்தான். ஏன் மண்ணின் மகத்துவத்தை கூட மருந்தாக்கினான். ஒவ்வொரு கால கட்டங்களிலும் பல கொடிய நோய்கள் வரும் போது கூட அதற்கேற்றார் போல் தன் அறிவை பயன்படுத்தி மருந்துகளை இயற்கையிலிருந்து கண்டறிந்தான்.

“நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்”

தெய்வபுலவர்ஐயன் வள்ளுவன், கூற்றுப்படி நோய் இன்னதென்று ஆராய்ந்து நோயின் காரணம் ஆராய்ந்து அதை தணிக்கும் வழியையும் ஆராய்ந்து உடலுக்கு பொருந்தும் படியாக செய்ய வேண்டும்.

இயற்கை மருத்துவம் ஆக்கப்பூர்வமானது. மனிதனின் உடல் நலம், மனநலம், கட்டுப்பாடு, உணர்வு, ஆன்மிகம் ஆகியவற்றினைப் இயற்கையுடன் ஒன்றிணைந்து நோயை குணமாக்க கூடியதாகும். உடல் நலத்தை மேம்படுத்துதல், நோய் வராமல் தடுத்தல், நோய் வந்தபின் சரிசெய்தல், இழந்த சக்தியை மீண்டும் பெற செய்தல் போன்றவற்றினை இயற்கை மருத்துவம் திறம்பட செய்யும்.

இயற்கைமுறை மருத்துவத்தில் உடலில் நோய் காரணிகள் மற்றும் விஷத்தன்மை மற்றும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மூலமாக நோய் குணமாக்கப்படுகிறது. இயற்கையே ஒரு மிக சிறந்த மருத்துவர் ஆகும்.

இந்த அகண்ட பிரபஞ்சத்தில் மனிதகுலத்தை படைத்த இறைவன். மனித இனம் பசியாறவும் அவனுடைய பிணிகளை போக்கவும் இயற்கை கொடைகளை அளித்திருக்கிறார். இன்று மனிதனுடைய பேராசையில் நாம் அனைத்து இயற்கை செல்வங்களை இழந்து அழிவின் விளிம்பை நோக்கி பயணப்பட்டு கொண்டிக்கிறோம். விஞ்ஞான வளர்ச்சி என்பது சுய லாபத்திற்கு அல்லாமல் இயற்கை வளப்படுத்துவதற்குஉபயோகிக்க வேண்டும். இன்றைய மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப இயற்கை சூறையாடப்படுகிறது. நமது முன்னோர்கள் மண்பாண்டங்களில் உணவு சமைத்து இலைகளில் உணவருந்தினர். சூரியகதிர்களின் வலிமையையும், தியானம், யோகா போன்றவற்றால் உடல் மற்றும் மனவளத்தை பெருக்கும் வித்தைகளை கற்றுவைத்திருந்தனர்.

உலகத்திலேயே நமது பாரத தேசத்தில் தான் எண்ணிலடங்கா மூலிகைச்செடிகள் அமிர்த சஞ்சிவினிகளும் உள்ளன. நமது உணவு பழக்கமே ஒரு மருத்துவம் தான். நாம் அன்றாடம் இயற்கை அருமருந்து உபயோகிக்கிறோம். குறிப்பாக மஞ்சள், சீரகம், வெந்தயம், மல்லி, காயம் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை மேன்மைபடுத்தும் பொருள்களையே அறிந்தும் அறியாமலும் உட்கொள்கிறேன். இயற்கை மருத்துவத்தில் உணவுதான் மருந்தாகிறது.

நமது தேசபிதா மகாத்மா காந்தியடிகள் இயற்கை மருத்துவத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தார். எனவேதான் அவர் 1946 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் பூனே அருகில் உருலிகஞ்சன் என்ற இடத்தில் நிசர்கோபச்சர் இயற்கை ஆசிரமத்தை நிறுவினார். இதன் காரணமாக அவருடைய 150-வது பிறந்த ஆண்டு மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் மூலமாக நிசர்கோபச்சார்மாஹோ உற்சவ் கொண்டாடப்பட்டது.

நமது மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயற்கை மருத்துவத்துடன் யோகாவும் பயிற்றுவிக்கப்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திமக்களிடம் சென்றடைந்து கொண்டிருக்கிறது. இதன் பலனாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 18-ம் தேதி இயற்கை மருத்துவ நாளாக கொண்டாடப்படுகிறது. இயற்கை மருத்துவத்துடன் யோகா சேர்த்து மானிட வாழ்வியலில் ஒரு மாற்றத்தை மக்கள் கடைப்பிடித்து நோயற்ற, ஒழுக்கமான, ஆரோக்கியமான எதிர்கால தலைமுறைகளை உருவாக்கப்படும் என நம்பிக்கை கொள்வோம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker