டைப் -2 சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் நாவல் பழம்….! Here’s why
உலகம் முழுவதும் எண்ணற்ற வகையான பழங்கள் விழைகின்றன. இவைகளில் பெரும்பாலானவை மனிதர்கள் உண்ண தகுந்தவையாகவும், அவர்களின் உடலுக்கு சக்தி அளிப்பதாகவும் இருக்கிறது. பலவகைகளில் பல சத்துகளை கொண்டது. அதில் ஒன்று தான் நாவல் பழம். இந்த நாவல் பழங்களை உண்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.
பரம்பரை மற்றும் தவறான உணவு பழக்கங்களால் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. நாவல் பழம் சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு குறைபாட்டை குணமாக்கும் ஒரு சிறந்த பலம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமல் தடுக்கிறது.
நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப் படுத்திவிடலாம்.
நாவல் பழம் பல்வேறு நோய்களுக்கு மாமருந்தாக உள்ளது. பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக் குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். ரத்த சோகை நோயைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்ப டும் வலியையும் நிவர்த்தி செய்யும். ஆனால் அளவோடு சாப்பிட வேண்டும்.
நாவல் பழத்தின் விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது. இதன் செயல்பாடு உடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது. இதனால் நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுபாட்டில் இருக்க்கும் என்பது லக்னோவில் உள்ள நீரிழிவு நோய் ஆராய்ச்சி மையத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்தது, நாவல் பழத்தில் இரு வகைகள் உள்ளன.
ஒன்று உருண்டை ரகம். இன்னொன்று நீள ரகம். இவற்றுள் நீள வடிவில் பெரியதாய் இருக்கும் பழவகையில்தான் இனிப்புச் சுவை அதிகம். உருண்டை ராகமே மருத்துவ குணம் உடையது. பெரும்பாலான பழங்களை அப்படியேதான் உட்கொள்ள வேண்டும். பெரும்பாலான பழங்களை அப்படியேதான் உட்கொள்ள வேண்டும்.