எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றுவது நல்லதா? கெட்டதா!
கனிகளில் ராஜகனி என்று போற்றப்படுவது எலுமிச்சம்பழம். மதிப்புக்குரியவர்களை காணும்போது அவர்கள் கைகளில் எலுமிச்சம்கனியை அளிப்பது இன்றும் வழக்கில் உள்ள செயலாகும்.
இறைவியான துர்க்கைக்கு நிகரானதாக கருதப்படும் எலுமிச்சம்பழம், தனது பிஞ்சு, காய், பழம், ஊறுகாய் போன்ற எந்த நிலையிலும் தனது புளிப்புத்தன்மையை மாற்றிக் கொள்ளாது. (இறைவனும் எந்த நிலையிலும் தன் இறைத்தன்மை மாறாதவன்). ஆகையால் அதை மாலையாய் கட்டி போடலாம்.
அதாவது ஒருவர் வைத்து விட்டுப் போன எலுமிச்சம்பழ விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போது மற்றொருவர் தனக்காக சில எலுமிச்சம்பழ விளக்குகளை ஏற்றுவார் அல்லவா? அப்போது இவருக்கு முன்னர் ஏற்றப்பட்ட விளக்கிலிருந்து எலுமிச்சம்பழத்தின் ஓரங்கள் கருகி எரியும் போது அதிலிருந்து வெளிப்படும் சிட்ரிட் அமிலப் புகையானது நமது உள்சென்று கர்ப்பப் பையினை அரித்து குழந்தையினை தாங்கும் வலிமையை இழந்து விடுவதாகவும் அதனால் புத்திரபாக்கியமே கிடைக்காது எனவும் தெரிவிக்கின்றார்கள் ஆய்வாளர்கள்.
அதனால் தான் நிறைய பெண்களுக்கு கர்ப்பப்பை உபாதைகள் ஏற்படுகின்றன. அப்படியென்றால் எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றக்கூடாதா? எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றக்கூடாது அக விளக்கு பிரகாசிக்க அகல் விளக்குதான் ஏற்ற வேண்டும்.