உறவுகள்புதியவை

கான்பூர்: தாயைப் போல வளர்த்து வந்த பெண் உயிரிழந்ததால் தற்கொலை செய்து கொண்ட நாய்

நாய் என்றாலே நன்றிக்கு உதாரணம் சொல்வார்கள். அதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. ஆனால் அதை ஒரு துக்கமான நிகழ்வு மூலம் நிரூபித்திருப்பதுதான் அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது.

கான்பூர் மாவட்டம் மாலிக்புரம் பகுதியைச் சேர்ந்த பெண்மணி, சிறுநீரகம் பாதித்து மரணம் அடைந்த நிலையில், அவர் வளர்த்து வந்த பெண் நாயும், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

மருத்துவத் தம்பதி வளர்த்து வந்த நாயின் இறப்புப் பற்றிய செய்தி, அப்பகுதியில் காட்டுத்தீப் போல பரவி, நகர் முழுவதும் நாயின் இறப்புப் பற்றிய பேச்சே முழுக்க ஒலித்து வருகிறது.

டாக்டர் ராஜ்குமாரின் மனைவி டாக்டர் அனிதா ராஜ் சிறுநீரகப் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை மரணம் அடைந்தார். அவரது உடல் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது முதல், அவர் வளர்த்து வந்த நாய் ஊலையிட்டு மிக சத்தமாக அழுதுகொண்டே இருந்தது. இதனால், அந்த நாயை தேவையற்றப் பொருள்களை போட்டு வைக்கும் அறையில் பூட்டி வைத்தார் அனிதா ராஜின் மகன்.

ஆனால், அங்கிருந்து எப்படியோ தப்பிய நாய், நான்கு மாடிகளைக் கொண்ட அந்த வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று குரைத்துக் கொண்டே இருந்துள்ளது. அனிதா ராஜின் உடலை நல்லடக்கம் செய்ய உறவினர்கள் இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அந்த நாய், மாடியில் இருந்து குதித்து கீழே விழுந்து உயிரிழந்தது.

இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினரும், உறவினர்களும், நாயின் நன்றியுள்ளத்தை நினைத்து கண்ணீரோடு நெகிழ்ச்சி அடைந்தனர்.

சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு, சாலையில் இருந்த இந்த நாயை தனது மனைவி கண்டெடுத்து வீட்டுக்குக் கொண்டு வந்து பராமரித்ததாகவும், இந்த நாயும் வீட்டில் ஒருவராகவே வைத்துப் பார்க்கப்பட்டதாகவும் அனிதாவின் கணவர் ராஜ்குமார் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker