சிங்கிள்ஸ்-க்கு ஃப்ரீ அட்வைஸ் கொடுக்கும் டேட்டிங் செயலிகள்
கரோனா வைரஸ் தொற்று காரணமாக சிங்கிள்ஸ்-களுக்கு பம்பிள், டிண்டர் போன்ற டேட்டிங் செயலிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளன.
கரோனா தொற்றால் உலகம் முழுவதுமே இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பொதுவாக கூட்டம் நிறைந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய நபர்களை அறிமுகப்படுத்தும் பம்பிள், டிண்டர் போன்ற செயலிகள் பயனர்களுக்கு கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளன.
அதன்படி, டேட்டிங் செயலிகள் ஒவ்வொரு நாளும் புதிய நபர்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றன. பயனர்களின் மகிழ்ச்சி எங்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று உங்களது ஆரோக்கியமும் முக்கியம். எனவே, அடிக்கடி கைகளை கழுவுதல் போன்ற சுகாதார முறைகளை கையாளுங்கள். பொது இடங்களுக்குச் செல்வதை தவிருங்கள். அவசியம் இல்லாமல் நீண்ட தூரா பயணத்தை மேற்கொள்ள வேண்டாம். கரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள உலக சுகாதார அமைப்பு கூறும் வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றுங்கள் என அறிவுறுத்தியுள்ளது.