சமையல் குறிப்புகள்புதியவை
சேமியாவில் செய்யலாம் சூப்பரான பக்கோடா
சேமியாவில் பல்வேறு ரெசிபிகளை செய்து இருப்பீங்க. இன்று சேமியாவை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சேமியாவில் செய்யலாம் சூப்பரான பக்கோடா
தேவையான பொருட்கள் :
- சேமியா – 100 கிராம்
- கடலை மாவு – 2 டீஸ்பூன்
- அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்
- வெங்காயம் – 2
- புதினா – ஒரு கைப்பிடி அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு.
சேமியாவில் செய்யலாம் சூப்பரான பக்கோடா
செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.சேமியாவை தண்ணீரில் 5 நிமிடம் ஊறவிட்டு வடிகட்டவும்.
வடிகட்டிய சேமியாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கடலைமாவு, அரிசி மாவு, வெங்காயம், மிளகாய் தூள், புதினா, உப்பு சேர்த்து நன்கு பிசிறவும் (நீர் சேர்க்க வேண்டாம். சேமியாவின் ஈரம் போதுமானது).
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இந்தக் கலவையை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.