எடிட்டர் சாய்ஸ்புதியவை

பெண்களே மின்சார செலவை இப்படியும் குறைக்கலாம்

வீட்டின் மின் சாதன பொருட்களை தகுந்த முறையில் பராமரிப்பதன் மூலம் உங்கள் வீட்டின் மின் பயனீட்டின் அளவைக் குறைக்க முடியும்.

பெண்களே மின்சார செலவை இப்படியும் குறைக்கலாம்

வீட்டின் மின் சாதன பொருட்களை தகுந்த முறையில் பராமரிப்பதன் மூலம் உங்கள் வீட்டின் மின் பயனீட்டின் அளவைக் குறைக்க முடியும். பாதுகாப்புக்கும் உத்தரவாதம் கிடைக்கும். உங்கள் வீட்டின் வயரிங் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக இருந்தால், அதை மாற்ற வேண்டியது அவசியம். பழைய முறையில் சுவருக்கு வெளியே வயரிங்கை பட்டியில் பதித்து பயன்படுத்தி இருப்பார்கள். புதிய முறையில், சுவருக்கு உள்ளேயே வயரிங்கை செய்கிறார்கள். இந்த முறையே சிறந்தது என்கிறார்கள் நிபுணர்கள். தகுந்த சான்றிதழ் பெற்ற எலக்ட்ரீஷியனைக் கொண்டு மின் சாதன பொருட்களை பராமரிக்க வேண்டியது அவசியம்.

20, 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏ.சி. வாங்குவார்கள். ஆனால் அதற்கு பொருத்தமான ஐ.எஸ்.ஐ. தரச் சான்றுடன் கூடிய ஸ்டெபிலைசரை வாங்க மாட்டார்கள். தரமற்ற ஸ்டெபிலைசரால் தரமான மின் சாதன பொருட்களை காப்பாற்ற முடியாமல் போய்விடும். உங்களின் குளிர் சாதன பெட்டியில் அதன் அளவுக்கு மீறி பொருட்களை திணித்து வைக்காதீர்கள். உங்களின் குளிர் சாதன பெட்டியில் 25 சதவீதம் அளவுக்கு காலி இடம் அவசியம். இதனால் உங்கள் குளிர்சாதன பெட்டியின் திறன் அதிகரிக்கும்.

துணி துவைக்கும் எந்திரத்திலும் தேவையான அளவுக்கு நீரும், சோப்பு பவுடரும் சேர்த்து பயன்படுத்த வேண்டும். மின் சாதனப் பொருட்களின் மீது நேரடியாகச் சூரிய ஒளி படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். மின் சாதன பொருட்களின் பயன்பாட்டுக்கு பின், அதற்கான மின் இணைப்பை துண்டித்துவிட வேண்டும். இதன் மூலம் தேவையற்ற மின் கசிவை தவிர்க்கலாம். மின் இணைப்புகளை துண்டித்துவிட்டு, மின் சாதனப் பொருட்களை வாரத்துக்கு ஒரு முறையாவது சுத்தமாக துடைக்க வேண்டும்.

துணி துவைக்கும் எந்திரத்தை பயன்படுத்தியவுடன் அதன் உள்பகுதிகள் காயும் வகையில் சில நிமிடங்கள் எந்திரத்தை திறந்து வைக்கவும். ‘மைக்ரோ வேவ் ஓவனில்‘ உலோக பாத்திரங்களை பயன்படுத்தக்கூடாது. நள்ளிரவில் படுக்கை அறை தேவைக்கு அதிகமாக குளிர்ந்தவுடன் தூக்கக் கலக்கத்தில், ரிமோட்டை கொண்டு ஏ.சி.யை அணைத்து விடுவீர்கள். ஆனால் சிரமம் பார்க்காமல் எழுந்து அதன் மெயின் சுவிட்சையும் அணைத்துவிட்டு படுக்கவும். அதுதான் சிறந்தது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker