ஆரோக்கியம்புதியவை

ஆல்பா தியானம்… நினைவாற்றல் அதிகரிக்கும்… தன்னம்பிக்கை கூடும்…

 

ஆல்பா தியான பயிற்சியால் ஆழ்மனதை செயல்பட வைக்கலாம். இதனால், மனம் ஒருமுகப்படும். நினைவாற்றல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை கூடும். மொத்தத்தில் மனம் லயித்துவிடும்.

தூங்காமல் தூங்குவது எக்காலம் என்று சொன்னார் பட்டினத்தார். தூக்கத்துக்கும் தூக்கமின்மைக்கும் இடைப்பட்ட நிலைதான் அது. நமது மூளை செயல்படும் தன்மையை ஆல்பா, பீட்டா, டெல்டா, தீட்டா என வகைப்படுத்துகிறார்கள். இதில், ஆல்பா நிலை மிக முக்கியமானது.

“ஆல்பா தியான நிலையில், ஆழ்மனதால் சிந்திக்க முடியும். படிப்படியாகப் பயிற்சி கொடுத்து மனதையும் உடலையும் லகுவாக்கி ஆல்பா தியான நிலைக்கு கொண்டுவந்துவிடுவோம். இந்த நிலையை எட்டும்போது மனம் அமைதியாகிவிடும். உடல் லகுவாகிவிடும்.

நாம் என்னென்ன செய்ய நினைக்கிறோமோ அவற்றை எல்லாம் மனதில் காட்சிப்படுத்திப் பார்க்க வேண்டும். நமது விருப்பம்,ஒரு குறிக்கோளை அடைவதாகவோ, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதாகவோ அல்லது ஒரு விற்பனை இலக்கை எட்டுவதாகவோ இருக்கலாம்.

எல்லோருக்கும் ஆழ்மனம் உண்டு. ஆனால், அது சரிவர செயல்படாமல் இருக்கும். ஆல்பா தியான பயிற்சியால் ஆழ்மனதை செயல்பட வைக்கலாம். இதனால், மனம் ஒருமுகப்படும். நினைவாற்றல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை கூடும். மொத்தத்தில் மனம் லயித்துவிடும்.

ஒருசில மாணவர்கள் நன்றாக படித்திருப்பார்கள். ஆனால், தேர்வு எழுதும் அறைக்குள் சென்றதும், படித்தது எல்லாம் மறந்ததுபோல் தோன்றும். இன்னும் சிலர் விஷயம் தெரிந்தவர்களாக இருப்பார்கள். மேடை பயம் காரணமாக, மைக்கை தொட்டவுடன் பேச திணறுவார்கள். போதியப் பயிற்சி கொடுத்தால் போதும் அவர்களின் படைப்பாற்றல் மேலோங்கும். ஆல்பா தியான நிலையை அடுத்து, செல்லொளி தியானம், சக்கரா தியானம், சித்த குண்டலினி என 9 தியான நிலைகள் இருக்கின்றன.

ஆல்பா தியானம் மாணவ-மாணவிகளுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியது. இதன் காரணமாக, படிப்பில் நன்றாக கவனம் செலுத்த முடியும். நினைவாற்றல் அதிகரிக்கும். பாடங்களை ஆழ்ந்து படிக்கலாம். தேர்வின்போது, படித்த பாடங்களை நன்கு நினைவுபடுத்தி எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, மாணவர்களின் நடத்தை மிக நன்றாக இருக்கும். நண்பர்களுக்கு இடையே மனஸ்தாபங்கள் குறையும்.

வயதுக்கோளாறுகளால் தோன்றும் பிரச்சினைகளில் ஒரு தெளிவு பிறக்கும். இந்த வயதில் படிப்புதான் முக்கியம் என்ற நல்ல சிந்தனை மனதில் மேலோங்கும். மனதில் ஈகோ வராது. கோபப்பட மாட்டார்கள். பெற்றோரிடமும், ஆசிரியர்களிடமும் நன்றாக நடந்துகொள்வார்கள். எப்போதும் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker