சமையல் குறிப்புகள்புதியவை
குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் சாண்ட்விச்
குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் வைத்து சூப்பரான சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் சாண்ட்விச்
தேவையான பொருட்கள் :
- பிரெட் – 2 ஸ்லைஸ்,
- வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
- சாக்லேட் பார் – ஒன்று.
சாண்ட்விச்
செய்முறை:
இரண்டு ஸ்லைஸ் பிரெட்டில் வெண்ணெயை தடவி வைக்கவும்.
சாக்லேட்டை இரண்டாக உடைத்து அதை ஒரு ஸ்லைஸின் இரண்டு கர்னரில் வைத்து, மற்றொரு பிரெட் ஸ்லைஸை எடுத்து மேலே வைத்து, பிரெட் டோஸ்ட்டரில் வைத்து டோஸ்ட் செய்யவும்.
சாக்லேட் உருகி, சூப்பர் டேஸ்ட்டில் உருவாகும் இந்த சாண்ட்விச்சை குட்டீஸ் மிகவும் ரசித்து சாப்பிடுவார்கள்.