தினமும் இஞ்சி சாப்பிடச் சொல்வது ஏன்? என்ன விளைவுகள் உண்டாகும்?
இஞ்சியில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் காணப்படுகிறது. இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் செரிமான பிரச்சினை முதல் புற்றுநோய் வரை தடுக்கக் கூடிய ஆற்றல் உடையது
இஞ்சி நிறைய நன்மைகளை தரக்கூடிய மசாலா பொருளாகும். பெரும்பாலும் உணவுகளில் நாம் இஞ்சியை பயன்படுத்தி வருகிறோம் . இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதால் இதை மாத்திரை வடிவில் கூட பயன்படுத்தி வருவது உண்டு.
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுவதால் வலி மற்றும் வீக்கத்தை போக்க உதவுகிறது. இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கும் ஒரு ஆக்ஸிஜனேற்றயாகும். இஞ்சி புற்றுநோயை குறைக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.
இப்படி ஏராளமான நன்மைகளை அளிக்கும் இஞ்சியை பற்றி பார்ப்போம்.
நெஞ்செரிச்சலை போக்கும் இஞ்சி
சில நேரங்களில் சாப்பிட்ட உடன் எதுக்களித்தல், நெஞ்செரிச்சல் பிரச்சினை உண்டாகலாம். இந்த நெஞ்செரிச்சல் பிரச்சினை வேதனைக்கு உரியது. இதை சரி செய்ய இஞ்சி உதவுகிறது.
கொஞ்சமாக இஞ்சியை தேநீரில் போட்டு குடித்து வர நெஞ்செரிச்சல் நீங்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
அழற்சியை போக்குகிறது
அழற்சியால் தான் பலவிதமான நோய்கள் வருகின்றன. கீல்வாதம் போன்ற நோய்களை சரி செய்ய இஞ்சியை எடுத்துக் கொண்டு வரலாம். ஏனெனில் இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் அழற்சியால் ஏற்படும் நோய்களை விரட்டுகிறது.
புற்றுநோய் அபாயத்தை குறைத்தல்
இஞ்சி புற்றுநோய் செல்களின் அபாயத்தை போக்கும் தன்மை கொண்டது. இஞ்சி கீமோதெரபி மருந்துகளை விட கருப்பை புற்றுநோய் செல்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் கொன்றுவிடுகிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. பெருங்குடல் மற்றும் குடல் அழற்சியைத் தடுக்க இஞ்சி உதவுகிறது. இந்த அழற்சி தான் பெருங்குடல் மற்றும் குடல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்தை உண்டாக்குகிறது. எனவே இஞ்சியை சாப்பிட்டு வரும் போது பெருங்குடல் மற்றும் குடல் புற்றுநோய் ஆபத்தை குறைக்க முடியும்.
சீரண சக்தியை மேம்படுத்துகிறது
இஞ்சி வயிற்றில் ஏற்படும் குமட்டலை தணிக்கிறது. இஞ்சி இயற்கையான ஆன்டி பயாடிக் ஆகும். இது வயிற்று வலிக்கு காரணமான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை விரட்ட உதவுகிறது.
செரிமான செயல்முறையின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் உமிழ்நீரைத் தூண்டுவதற்கும் இஞ்சி உதவுகிறது. நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது காலையில் ஏற்படும் குமட்டல், வாந்தியை போக்க இஞ்சி உதவுகிறது.
தலைவலியை போக்க உதவுகிறது
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் தலைவலியை போக்க பயன்படுகிறது. தலைவலிக்கு நீங்கள் மருந்து மாத்திரைகள் சாப்பிடுவது கூட பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இயற்கையான வலி நிவாரணியாக நீங்கள் இஞ்சியை பயன்படுத்தி கொள்ளலாம். எனவே ஒவ்வொரு நாளும் இஞ்சியை சேர்த்து வருவது உங்க தலைவலியை குறைக்கும்.