இந்த பிரச்சினைகள் உள்ள பெண்களுக்கு உடலுறவில் எப்போதும் ஆசை தோன்றாதாம்
பெண்களை பொறுத்தவரையில் அவர்களின் பாலியல் ஆசை குறைவதற்கு பல காரணங்கள் உள்ளது. அதில் முக்கியமானது அவர்களின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், சில தவறான உணவுமுறைகளும்தான். இந்த பதிவில் பெண்களின் லிபிடோவை குறைக்கும் விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
வைட்டமின் டி குறைபாடு
டெஸ்டோஸ்டிரோன் அளவை உயர்த்தவும், உற்சாகமான பாலியல் ஆர்வத்திற்கு தேவையான வலிமையை உடலுக்கு வழங்கவும் வைட்டமின் டி உதவும் என்று பாலியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தினமும் போதுமான அளவிற்கு வைட்டமின் டி எடுத்துக் கொள்வது பெண்களின் பாலியல் வாழ்க்கையை சீராக வைத்திருக்கும். மீன் முட்டையின் மஞ்சள்கரு, புரதச்சத்து நிறைந்த இறைச்சி போன்றவற்றில் போதுமான அளவு வைட்டமின் டி உள்ளது.
மன அழுத்த மருந்துகள்
பெண்கள் மனஅழுத்தத்தை எதிர்க்க எடுத்துக் கொள்ளும் மருந்துகள் அவர்களின் பாலியல் ஆர்வத்தை வெகுவாக பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் உங்கள் பாலியல் வாழ்க்கையை பாதிப்பதை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
செலீனியம் குறைபாடு
செலீனியம் குறைபாடு பெண்களின் பாலியல் ஆசையை குறைப்பதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஆண்களை பொறுத்த வரையில் செலீனியம் அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. பிரேசில் கொட்டைகளில் செலீனியம் அதிகமுள்ளது, ஆனால் இது உடலில் அதிகமாக இருப்பதும் ஆபத்துதான். எனவே சரியான அளவில் இதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.