ஆரோக்கியம்புதியவை

இந்த உணவுகளை சாப்பிட்டால் நிறுத்தவே முடியாதாம்… ஆனா உடம்புக்கு ரொம்ப கேடு…

நாம் சாப்பிடும் சில வகை உணவுகள் ஆரோக்கியமற்றதாக இருந்தால் கூட நம்மால் நிறுத்தவே முடியாது. காரணம் அதன் சுவைக்கு நம் நாக்கு அடிமையாகி விடுகிறது. அப்படி எந்த மாதிரியான உணவுகள் நம் நாக்கை அடிமைப்படுத்துகிறது என்று பார்க்கலாம்.

சில வகை உணவுகள் ஆரோக்கியமற்றதாக இருந்தால் கூட நம்மால் நிறுத்தவே முடியாது. காரணம் அதன் சுவைக்கு நம் நாக்கு அடிமையாகி விடும். நாமும் இந்த வகை உணவுகளை நிறுத்த வேண்டும் என்று எவ்வளவோ முயற்சிப்போம். நாம் சாப்பிடும் பீட்சா முதல் ஆழமான டிஷ் வரை எல்லாமே நமக்கு பிடித்ததாகி விடுகிறது. டீவி பார்க்கும் போதோ எதாவது நொறுக்கு தீனி தேடும் போதோ கண்ல படுவது சிப்ஸ் பாக்கெட் தான். இப்படி நம்மளுக்கே தெரியாமல் அடிமையாகி இருக்கும் சில வகை உணவுகளை பற்றி தான் இப்போ பார்க்க போகிறோம்.

​பீட்சா

நண்பர்களுடன் பார்டி என்றாலோ எப்பொழுது சாப்பிட வேண்டும் என்றாலும் வீடு தேடி ஆர்டர் செய்வதில் இந்த பீட்சா முதல் இடம் வகிக்கிறது. ஏராளமான சீஸ், இறைச்சி, கலோரிகள் என எல்லாவற்றையும் சேர்த்த ஆழமான டிஷ் ஆக இது உள்ளது. அதனால் என்னவோ கார்பரேட் கலாச்சாரத்தில் பீட்சாவிற்கு எப்பொழுதும் தனி இடம் உண்டு. இந்த சீஸ் வகை உணவிற்கு அதிகப்பட்ட ஃபேன்ஸ் என்றே கூறலாம். மக்கள் அதிகமாக அடிமையாக இருக்கும் உணவுகளில் பீட்சாவும் ஒன்று.

​உருளைக்கிழங்கு சிப்ஸ்

உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் கொழுப்பு, உப்பு மற்றும் கார்ப்ஸ் போன்ற ஏராளமான பொருட்கள் உள்ளன. மக்கள் தங்கள் ஸ்நாக்ஸ் டைம், மூவி டைம் இவைகளை இந்த சிப்ஸ் கொண்டு நிரப்புவது உண்டு. குழந்தைகள் அடிக்கடி விரும்பி சாப்பிடும் உணவாக சிப்ஸ் உள்ளது. வெறும் உருளைக்கிழங்கு சிப்ஸ்யை மட்டுமே சாப்பிடாமல் கூடுதலாக வறுத்த பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு இவைகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இது உங்களுக்கு நல்ல கொழுப்புகளை பெற உதவி செய்யும். வேண்டும் என்றால் உங்க ஸ்நாக்ஸ் தேவைக்கு பாப்கார்ன் பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இதில் நார்ச்சத்தும் அதிகம் மற்றும் கலோரி களும் குறைவு.

​பாஸ்தா

இது ஒரு சுவையான சிற்றுண்டி உணவாகும். இதை நொடிப் பொழுதில் செய்து விட முடியும் என்பதால் மக்கள் இதை அதிகமாக விரும்பி உண்ணுகின்றனர். இதில் கலோரிகளும் கார்ப்ஸ்களும் பாதியாக இருக்கிறது. இந்த பாஸ்தாவை இன்னும் நீங்கள் ஆரோக்கியமானதாக மாற்ற விரும்பினால் மாட்டிறைச்சி மற்றும் வான்கோழி மார்பகத்தை பயன்படுத்துங்கள். எளிய தக்காளி சாஸ் உடன் தொட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

​சிப்ஸ் மற்றும் டிப்

இதில் புளிப்பு க்ரீம், சீஸ் போன்றவற்றை சேர்த்து இருந்தாலும் கொழுப்புகள் இருக்கிறது. இருப்பினும் இந்த சுவை மிகுந்த உணவுகளை வேண்டாம் என்று சொல்வது கடினம். நீங்கள் ஹம்மஸ் போன்றவற்றை பயன்படுத்துங்கள். நீங்கள் வேண்டுமானால் கொழுப்பை குறைத்துக் கொண்டு கொண்டைக்கடலை புரதத்தை சேருங்கள். பெல் மிளகு, ப்ரோக்கோலி, கேரட், வெள்ளரிகள் மற்றும் செலரி போன்ற அனைத்து காய்கறிகளும் நிரம்பிய ஒரு ஆரோக்கியமான கலவையை தேர்ந்தெடுக்கலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker