என்ன செஞ்சாலும் உங்களுக்கு தாடி வளரமாட்டீங்குதா? அப்ப இத கண்டிப்பா படிங்க…
ஆண்களின் அழகை மேம்படுத்திக் காட்டுவதில் தாடி முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால் அனைத்து ஆண்களுக்குமே தாடி எளிதில் வளர்ந்துவிடும் என்று கூற முடியாது. சில ஆண்கள் தாடி வளர பல வழிகளை முயற்சிப்பார்கள். அதில் சிலர் தாடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்களை வாங்கியும், இன்னும் சிலர் இயற்கை வழிகளின் மூலமும் தாடி வளர முயற்சிப்பார்கள்.
ஆனால் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் கூட தாடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பதை பலரும் மறந்துவிட்டனர். உண்மை என்னவென்றால், பல உணவுகள் தாடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். ஆனால் தாடி வளராமல் இருக்கும் பலரது மனதில் எழும் கேள்வி, “தாடி வளர என்ன சாப்பிட வேண்டும்?” என்பது. பொதுவாக தாடியின் நிலை உடல் ஆரோக்கியத்துடன் நேரடியாக ஒத்துள்ளது.
இருப்பினும் கவலைப்பட வேண்டாம். தாடி வளராமல் கஷ்டப்படும் ஆண்களுக்கு, எந்த உணவுகளை உட்கொண்டால் தாடி விரைவில் வளரும் என்று சில உணவுகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை அன்றாட உணவில் சேர்த்து வந்தாலே, தாடி நன்கு வளரும்.
ஜூஸ்கள்
பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படும் சாறுகள், உடலின் பல்வேறு உறுப்புக்கள் மற்றும் ஆரோக்கியத்தில் அற்புதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியுமா? ஆம், ஏனெனில் நற்பதமான பழங்கள் மற்றும் காய்கறிகளில் உடலுக்கு தேவையான, அதோடு தாடியின் வளர்ச்சிக்கு உதவும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. ஆகவே ஜூஸ்களை அன்றாட டயட்டில் சேர்த்துக் கொள்வதன் மூலம், ஸ்கால்ப் மற்றும் முடிக்கு ஒரு நல்ல பராமரிப்பு கொடுத்தவாறு இருக்கும். எந்த ஜூஸ்கள் சிறந்தது என்று நீங்கள் கேட்கலாம்.
உதாரணம்: ஆரஞ்சு ஜூஸ், ஸ்ட்ராபெர்ரி ஜூஸ், கொத்தமல்லி ஜூஸ், எலுமிச்சை ஜூஸ், பசலைக்கீரை ஜூஸ், கேரட் ஜூஸ், கொய்யா ஜூஸ், வெள்ளரிக்காய் ஜூஸ், கற்றாழை ஜூஸ், வெங்காய ஜூஸ், கிவி ஜூஸ்
காய்கறிகள்
நல்ல அடர்த்தியான மற்றும் நீளமான தாடி வேண்டுமா? அதற்கு சில ஹெர்பல மாத்திரைகள் அல்லது சில வகையான தெரபிகள் இருக்கலாம். ஆனால் ஒருவரது முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டுமானால், முதலில் அவரது டயட்டைத் தான் கண்காணிக்க வேண்டும். டயட்டில் நல்ல ஆரோக்கியமான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை சேர்த்து வந்தால், தானாக முடி நன்கு வளர்ச்சி பெற ஆரம்பிக்கும். உதாரணமாக, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, பூசணி விதைகள், பசலைக்கீரை, காலிஃப்ளவர், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, காளான், ப்ராக்கோலி, கேல், கொலார்டு கீரை, முள்ளங்கி விதைகள்.
சத்துக்கள் : பொட்டாசியம், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி.
பழங்கள்
பல்வேறு பழங்கள் நாவிற்கு விருந்தளிக்கும் வகையில் மிகவும் அற்புதமான சுவையுடனும், தாடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்களுடனும் உள்ளது. அந்த பழங்களாவன:
உதாரணம்: ப்ளம்ஸ், வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஊட்டச்சத்துக்கள்: பொட்டாசியம், டயட்டரி நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம் அல்லது ஃபோலேட், வைட்டமின் சி
மீன் மற்றும் இறைச்சி
மீன்களில் உடலுக்குத் தேவையான புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே உங்களுக்கு தாடி நன்கு வளர வேண்டுமென்று நினைத்தால், சால்மன் மீன், சூரை மீன் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள். இவற்றில் புரோட்டீன் மட்டுமின்றி, முடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு உதவும் பி வைட்டமின்களும் உள்ளது. கூடுதலாக, மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது செல் சவ்வுகளைப் பாதுகாக்க உதவுகிறது.
உதாரணம்: சால்மன், சூரை மீன் மற்றும் இறைச்சி ஊட்டச்சத்துக்கள்: வைட்டமின் டி, கால்சியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
காபி/காப்ஃபைன்
காபி பிரியர்களுக்கு நிச்சயம் இது ஒரு நற்செய்தியாகத் தான் இருக்கும். உங்களுக்கு தாடி வளர்ச்சி குறைவாக இருந்தால், காபியை தினமும் குடியுங்கள். இதனால் தாடி நன்கு வளர்ச்சி பெறும்.
முட்டை வெள்ளைக்கரு
முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் மற்றும் தாடியின் வளர்ச்சியை அதிகரிக்கத் தேவையான இதர அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அதோடு, இதில் தாடியின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான பயோடின் ஏராளமாக நிறைந்துள்ளது.