அழகு..அழகு..ஆரோக்கியம்புதியவை

வெண்மையான பற்கள் வேண்டுமா? அப்ப இத வெச்சு தினமும் பல்லை சுத்தம் பண்ணுங்க.

உடலுக்குள் செல்லக்கூடிய உணவின் வழித்தடமாக வாய்ப்பகுதி இருப்பதால் வாய் ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தின் ஒரு முக்கிய அங்கமாக பார்க்கப்படுகிறது. வாய் ஆரோக்கியம் பாதுகாக்கப்படாமல் இருந்தால் உணவின் வழியாக வாயில் இருக்கும் கிருமிகள்

மற்றும் பாக்டீரியாக்கள் உடலுக்குள் செல்லக்கூடிய வாய்ப்பு அதிகம் உண்டு. அதனால் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமல்ல இரண்டு முறை பல் துலக்குவதை வழக்கமாகிக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் செய்யக்கூடிய முதல் வேலை பல் துலக்குவது. பல் துலக்க நீங்கள் பற்பசையை விட பற்பொடியை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். கிருமிகளை எதிர்த்து போராடும் திறன் பற்பசையைக் காட்டிலும் பற்பொடிக்கு அதிகம் உண்டு.
ப்ளூரைடு மற்றும் ரசாயன அடிப்படைக் கூறுகளுக்கு மாற்றாக பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்ட ஆரோக்கியமான மாற்று பொருட்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. இந்த வகை மூலிகை பொருட்கள் பற்களை வெண்மையாக்குகின்றன மற்றும் பற்களில் உள்ள கறையை சுத்தப்படுத்துகின்றன என்ற நோக்கில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டாலும் நாளடைவில் அவை பற்களுக்கு தீங்கு உண்டாக்கி பற்களை வலுவிழக்கச் செய்கின்றன. ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தி தயாரிக்கும் பற்பசைகள் அல்லது பற்பொடிகள் காட்டிலும் இவை ஓராவிற்கு நல்லது என்றாலும் இதன் செயல்திறனை பற்றி நம்மால் உறுதியாக கூற முடியாது. அப்படியானால் இதற்கு என்ன தீர்வு? வீட்டில் தயாரிக்கும் பற்பொடி இதற்கு ஒரு தீர்வாக இருக்க முடியும். பற்பசையின் செயல்திறனுக்கு சற்றும் குறையாதது தான் பற்பொடியின் செல்திறனும். உண்மையில் பற்பொடி இரண்டு விதத்தில் பயன்படுகிறது. ஒன்று ப்ரஷ் கொண்டு பல்துலக்க மற்றொன்று வாயை சுத்தம் செய்யும் மவுத்வாஷ். ஒருவேளை உங்களுக்கு ப்ரஷ் பயன்படுத்தி பல்துலக்க பிடிக்கவில்லை, ஆனால் அதே சமயம் வாய் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் பற்பொடியில் தண்ணீர் சேர்த்து மவுத்வாஷ் போல் பயன்படுத்தி வாயை சுத்தம் செய்யலாம். ஒரே பொடி கொண்டு இரண்டு வித நன்மைகள் பெறலாம். இந்த பற்பொடியை நம்மால் வீட்டிலேயே தயாரிக்க முடியும். இதன் செய்முறையை நாம் இப்போது பார்க்கலாம்

வீட்டில் தயாரிக்கும் பற்பொடி செய்முறை:

தேவையான பொருட்கள்:
* பேக்கிங் சோடா – 2 டேபிள் ஸ்பூன்
* பென்டோனைட் களிமண் – 2 டேபிள் ஸ்பூன்
* அக்டிவேட்டேட் சார்கோல் பொடி – ½ டேபிள் ஸ்பூன்
* கல் உப்பு – ½ டேபிள் ஸ்பூன்
* பெப்பர்மிண்ட் அத்தியாவசிய எண்ணெய் – 15-20 துளிகள் செய்முறை:
* ஒரு கிண்ணத்தில் எண்ணெய் தவிர மேலே கூறப்பட்டுள்ள மற்ற மூலப்பொருட்களை சேர்த்துக் கொள்ளவும். அவற்றை நன்றாக கலக்கவும்.
* பிறகு சிறிது சிறிதாக அத்தியாவசிய எண்ணெய்யை சேர்த்து கலந்து கொள்ளவும்.
* தற்போது பற்பொடி தயார். * உங்களுக்கு விருப்பமான அளவில் இந்த பொடியை நீங்கள் தயார் செய்து கொள்ளலாம்.
பொருட்களை அதற்கேற்ற விகிதத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
* இதனை ஒரு ஜாடியில் மாற்றி உங்கள் குளியலறையில் வைத்துக் கொள்ளலாம். * வாய் சுகாதாரத்தை மேம்படுத்த ஒரு நாளில் இரண்டு முறை இந்த பொடியை பயன்படுத்தி வாயை சுத்தம் செய்யவும்.

நன்மைகள்
இந்த பொடியில் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு மூலப்பொருளும் பல்வேறு நன்மைகளைக் கொண்டது. எல்லா பொருட்களும் இணைந்து வாயை சுத்தம் செய்து பற்களில் படிந்துள்ள கறைகளை நீக்கி வெண்மையான “பளிச்” பற்களைத் தருகின்றன. பெப்பர்மிண்ட் எண்ணெய் வாயில் ஒரு புத்துணர்ச்சியான நறுமணத்தை தந்து வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது. மேலும் தேங்காய் எண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்வதால் உங்கள் வாய் சுகாதாரம் மேலும் பாதுகாக்கப்படுகிறது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker