சமையல் குறிப்புகள்புதியவை
குழந்தைகள் விரும்பும் சேமியா பகாளாபாத்
தேவையான பொருட்கள்
- சேமியா – 100 கிராம்
- தயிர் – 50 கிராம்
- பால் – 50 மில்லி
- இஞ்சித் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2
- கறிவேப்பிலை – சிறிதளவு
- திராட்சை, மாதுளை முத்துக்கள் – ஒரு கைப்பிடி
- ஆப்பிள் துண்டுகள் – 3 டேபிள்ஸ்பூன்
- கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
- எண்ணெய் – 2 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை :
- ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- கொதிக்கும் நீரில் சேமியாவைப் போட்டு, ஒரு நிமிடம் வைத்திருந்து வடிகட்டி தனியாக வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கவும்.
- இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், தயிர், உப்பு ஆகியவற்றை தாளிப்புடன் சேர்த்துக் கலக்கவும்.
- இதை சேமியாவில் சேர்த்துக் கலந்து பால், பழங்களை சேர்த்து நன்றாகக் கிளறி பரிமாறவும்.
- சுவையான சேமியா பகாளாபாத் ரெடி.