சமையல் குறிப்புகள்புதியவை
கோதுமை ரவை ஓட்ஸ் மசாலா தேப்லா
தேவையான பொருட்கள் :.
- கோதுமை ரவை – கால் கப்,
- கோதுமை மாவு – ஒரு கப்,
- ஓட்ஸ் – ஒரு டேபிள்ஸ்பூன் (வேண்டுமெனில்),
- ஓமம் – கால் டீஸ்பூன்,
- எண்ணெய், உப்பு- தேவையான அளவு,
- வெள்ளை மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,
- மஞ்சள் தூள் – அரை சிட்டிகை.
செய்முறை :.
- அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, கோதுமை ரவை, ஓட்ஸ், ஓமம், உப்பு, மஞ்சள் தூள், வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து, மிருதுவாகப் பிசைந்து, 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
- மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டி, மெலிதான முக்கோணமாகச் செய்யவும்.
- தவாவில் எண்ணெய் விட்டு, சூடானதும் தேப்லாவைப் போட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு, வெந்ததும் தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம்.
குறிப்பு :.
கோதுமையில் உள்ள பலன்கள் முழுமையாக கிடைக்கும். நார்ச்சத்து நிறைந்தது. சர்க்கரை நோயாளிகள், உடல் பருமனானவர்களும் சாப்பிடலாம்.
ஓட்ஸ் சேர்த்துச் சாப்பிடுவதால், மதியம் வரை பசிக்காது. ஓமம் செரிமான மண்டலத்தை மேம்படுத்தும். மலச்சிக்கல் நீங்கும்.