சமையல் குறிப்புகள்புதியவை

இத்தாலியன் பாஸ்தா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

  • பாஸ்தா – 500 கிராம்
  • வெங்காயம் – 1,
  • கேரட் – 1,
  • குடைமிளகாய் – 1
  • பூண்டு பேஸ்ட் – 1 1/2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 4
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • தக்காளி சாறு – 4 டேபிள் ஸ்பூன்
  • சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள், மிளகு தூள், சீரகப் பொடி, கரம் மசாலா – தலா 1 டீஸ்பூன்
  • உப்பு, எண்ணெய்- தேவையான அளவு



செய்முறை

  • வெங்காயம், கொத்தமல்லி, குடைமிளகாய், ப.மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் பாஸ்தாவை போட்டு அதனுடன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து முக்கால் பாகம் வேக வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்கியபின் வெங்காய், கேரட், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • காய்கள் நன்கு வெந்ததும் தக்காளி சாறு, சில்லி சாஸ், மிளகாய் தூள், மிளகு தூள், சீரகப் பொடி, கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • மசாலா பச்சை வாசனை போனபின்னர் இதில் பாஸ்தாவை போட்டு கிளறிவிடவும்.
  • இதன்மேல் கொத்தமல்லிக்தழை தூவி இறக்கினால் சுவையான இத்தாலியன் பாஸ்தா ரெடி!!!









Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker