எடிட்டர் சாய்ஸ்புதியவை

ஹார்மோன் சுரப்பை அதிகமாக்கும் முத்தம்

முத்தம்’ என்ற சொல் ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு வகையான உணர்வுகளை நமக்குள் உண்டாக்குவது இயல்பு. அன்பின் பரிமாணங்களான காதல், காமம், அரவணைப்பு, பாசம், நேசம் போன்ற அனைத்து உணர்வுகளையும் ஆழமாக வெளிப்படுத்துவதற்கான ஆயுதம்தான் முத்தம். அனைத்து வகையான முத்தங்களும் மருத்துவ ரீதியில் மற்றும் உணர்வு ரீதியில் உடலுக்கும் மனதுக்கும்

முத்தம் என்றவுடனே அதை காமத்தின் குறியீடாக பார்ப்பதே பெரும்பாலோரின் வழக்கம். ஆனால் காமத்தைத் தாண்டி பல உண்மைகளை முத்தங்கள் தன்னகத்தே ஒளித்து வைத்திருக்கின்றன!காதல் தொடங்கிய ஆதிகாலத்திலிருந்தே முத்தங்கள் அனைத்துக்கும் மனஅழுத்தத்தைப் போக்கும் மருத்துவ குணம் உண்டு. அவ்வகையில் முத்தங்கள் எப்போதுமே மருத்துவ முத்தங்கள்தான். குழந்தை பிறந்தவுடன் தாயால் தன் குழந்தைக்கு கொடுக்கப்படும் முதல் முத்தம் தாய் சேய் பாசப்பிணைப்பை உறுதி செய்யும்.

பிள்ளைகள் தந்தைக்கு வழங்கும் முத்தம் தந்தையின் சாட்சியை சொல்லும். காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தம்… மனைவி கணவனுக்கு கொடுக்கும் முத்தம்… அனைத்துமே காதல் ஹார்மோனை சுரக்கச் செய்து உறவுகளை பலப்படுத்தக்கூடியவை. உதடுகள் நடுங்க வயதான பாட்டி ஆசைத் தாத்தாவுக்கு பரிமாறும் ’நடுக்கமுத்தம்’ முதிர்ந்த வயதில் உருவாகும் நடுக்கங்களையும் போக்கும் மருத்துவ குணம் மிக்கது.’காதல் ஹார்மோன்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஆக்ஸிடோசின் (Oxytocin) ஹார்மோனுடைய சுரப்பினை தூண்டி அன்புணர்வை முத்தங்கள் அதிகரிக்கும். இரத்த அழுத்தம் தலைவலி உடல் அசதி சில வகையான இதய நோய்கள் மனஅழுத்தம் போன்ற நோய்களை குறைக்கும் தன்மையும் முத்தங்களுக்கு உண்டு. முகப்பொலிவினை உண்டாகுவதற்கும் முத்தங்கள் உதவும். நோய் எதிர்ப்புத் சக்தியை அதிகரிக்கும் வல்லமை முத்தங்களுக்கு இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உண்மை என்னவென்றால் மேற்சொன்ன மருத்துவப் பலன்களைப் பெற காமம் பொதிந்த முத்தங்கள் தான் அவசியம் என்றில்லை. நெற்றியில் தவழும் ஆசை முத்தம்… தலைமுடிகளை வருடும் அன்பு முத்தம்… கன்னங்களில் அழுந்தும் குழந்தை முத்தம்… இவை எதுவாக இருந்தாலும் சரி முத்தங்கள் நோய்த் தீர்க்கும். மீண்டும் அதே கேள்வி… முத்தங்கள் போதுமான அளவுக்கு பகிர்ந்துகொள்ளப்படுகிறதா!… உறவுகளின் நோய்களைப் போக்க உதடுகளை குவிப்போம்!Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker