சமையல் குறிப்புகள்
வைட்டமின் ‘சி’ நிறைந்த நெல்லிக்காய் பொரியல்
தேவையான பொருட்கள் :
- பெரிய நெல்லிக்காய் – 10
- இட்லி மிளகாய்ப் பொடி – 2 டீஸ்பூன்
- எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, சீரகம் – தேவையான அளவு
தாளிக்க
- கொத்தமல்லித்தழை – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
- கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- நெல்லிக்காயின் விதைகளை நீக்கி ஆவியில் வேக விடவும்.
- கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து… வெந்த நெல்லிக்காய் துண்டுகள், உப்பு இட்லி மிளகாய்ப் பொடி சேர்த்துக் கிளறி கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.