உணவில் அதிகளவு தக்காளியை சேர்த்தால் கிட்னியில் கல் வருமா?
மக்களிடையே சில உணவுப் பொருட்களால் கூட சிறுநீரக கற்கள் உண்டாக வாய்ப்புள்ளது என்று நம்புகின்றனர். அந்த வகையில் பார்க்கும் போது தக்காளி சிறுநீரக கற்களை உண்டாக்கும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. அது உண்மை தானா இல்லை அது வெறும் கட்டுக்கதையா என்பதை பற்றி இங்கே காண்போம்.
தக்காளி ஒவ்வொரு இந்திய உணவு வகைகளிலும் இன்றியமையாத ஒன்று. நாம் சாப்பிடும் கறிக் குழம்பில் இருந்து கெட்ச்அப் வரை இதன் பயன்பாடு இன்றியமையாதது. தக்காளியின் தனித்துவமான சுவை மேலும் உணவிற்கு சுவை சேர்க்கிறது.
அதுமட்டுமல்லாமல் தக்காளியில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன. விட்டமின் ஏ, பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம் ஆகிய ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. தக்காளி கண் பார்வைக்கு நல்லது. நீரிழிவு சிக்கல்களை களைய உதவுகிறது. சூரிய பாதிப்பிலிருந்து காக்கிறது. புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது.
சிறுநீரக கற்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் கால்சியம் கற்கள். நமது சிறுநீரகங்களில் அதிகளவு கால்சியம் ஆக்ஸலேட் படிவதால் தான் இந்த மாதிரியான கற்கள் உருவாகிறது. இந்த கால்சியம் ஆக்ஸலேட் பல்வேறு வகையான காய்கறிகளிலும் பழங்களிலும் காணப்படுகிறது. மேலும் நம் கல்லீரலும் தினமும் குறிப்பிட்ட அளவு கால்சியத்தை உற்பத்தி செய்கிறது. நமது எலும்புகள் மற்றும் தசைகள் இரத்தத்தில் இருந்து அதிகளவு கால்சியத்தை உறிஞ்சி விடுகின்றன.
இதுவே இந்த கால்சியம் அளவு இரத்தத்தில் அதிகமாக இருக்கும் போது சிறுநீரின் வழியாக வெளியேற்ற வேண்டிய சூழல் உண்டாகிறது. ஆனால் சிறுநீரகத்தால் அவ்வளவு கால்சியத்தை வெளியேற்ற முடியாது. எனவே இந்த கால்சியம் படிப்படியாக படிந்து படிகக் கற்களின் வடிவத்தை அடைகிறது. எனவே தான் தக்காளியில் ஆக்ஸலேட் இருப்பதால் அதை சிறுநீரக கற்களுடன் இணைக்கின்றனர்.
ஆனால் உண்மையில் தக்காளியில் காணப்படும் ஆக்ஸலேட் அளவு மிகவும் குறைவு. இந்த ஆக்ஸலேட் அளவு சிறுநீரக கற்களை உருவாக்காது. 100 கிராம் தக்காளியில் 5 கிராம் அளவு ஆக்ஸலேட் மட்டுமே இருக்கிறது. எனவே தக்காளியை சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் உருவாகும் என்பதை நீங்கள் நம்ப வேண்டாம். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் உங்க சிறுநீரை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். நீங்கள் விரும்பும் அளவிற்கு தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்ள முடியும். இதுவே நீங்கள் சிறுநீரக தொடர்பான பிரச்சினைகளை கொண்டு இருந்தால் கீரை, பீன்ஸ், பீட்ரூட் போன்ற அதிக அளவு ஆக்ஸலேட் உணவுகளை தவிருங்கள். காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன்பு சரியாக சமைத்து சாப்பிடுங்கள்.