சமையல் குறிப்புகள்புதியவை

சூப்பரான ரசம் இட்லி சாப்பிடலாம் வாங்க

தேவையான பொருட்கள் :

  • இட்லி – 5

ரசம் வைக்க :

  • தனியா – 1 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 3
  • மிளகு – 6
  • துவரம்பருப்பு – 1 டீஸ்பூன்
  • கடலை பருப்பு – 1/2 டீஸ்பூன்
  • சீரகம் – சிறிதளவு
  • தக்காளி – 1/2 கப்
  • புளி தண்ணீர் – 1/4 கப்
  • மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை
  • பெருங்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை
  • உப்பு – தே. அளவு
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • கொத்தமல்லி தழை – சிறிதளவு



செய்முறை :

  • கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பூண்டை தட்டி வைத்து கொள்ளவும்.
  • தனியா, காய்ந்த மிளகாய், மிளகு , துவரம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம் ஆகியவற்றை கடாயில் வறுத்து ஆற வையுங்கள். பின் மிக்ஸியில் நைசாக பொடித்து கொள்ளவும்.
  • அடுத்து தக்காளியை கைகளால் நன்றாக மசித்து அதனுடன் புளித் தண்ணீர் சேர்த்து பொடியாக்கி வைத்துள்ள ரசப் பொடி, உப்பு சேர்த்து கலக்குங்கள்.
  • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு வெடித்த பின்னர் காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு பெருங்காயப் பொடி சேர்த்து, தட்டிய பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளித்து அதை கலக்கி வைத்துள்ள ரசத்தில் ஊற்றுங்கள்.
  • அடுப்பில் ரசக் கலவையை வைத்து சிறு தீயில் வையுங்கள். கொதிநிலை வந்ததும் இறக்கிவிடுங்கள். ரசம் தயார்.
  • பரிமாறும்போது இட்லி வைத்து அதன் மேல் ரசம் ஊற்றி மேலே சிறிது கொத்தமல்லி, காராபூந்தி தூவி கொடுங்கள்.
  • அருமையாக இருக்கும் இந்த ரசம் இட்லி.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker