தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

குழந்தைகள் கோடை வெயிலில் வெளியில் போகாமல் பொழுதுபோக்க டிப்ஸ்

கொரோனா ஊரடங்கால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை வெளியில் வர முடியாத நிலை உள்ளது. அடிக்கிற வெயிலுக்கு வெளியில் விளையாடப் போனால் அம்மா திட்டுறாங்களா? வீட்டிற்குள் விளையாடினாலும் சேட்டை பண்றதா கண்டிக்கிறாங்களா? அம்மாஅப்பாவுக்கு இடைஞ்சல் தராமலும் வெயில் உங்களை பாதிக்காமலும் இருக்கும் இடத்திலேயே உங்களுக்கு விருப்பமான வழியில் பொழுதுபோக்க மகிழ்ச்சி கொள்ள சில வழிகளை நாங்க சொல்லட்டுமா?குட்டீஸ் உங்களுக்கு என்னென்ன பழங்கள் பிடிக்கும். ஆப்பிள் மாதுளை கொய்யான்னு அடுக்கிக்கிட்டே போறீங்களா? உங்களுக்குப் பிடிச்ச எல்லா பழத்தையும் சேர்த்து செய்த சாலட் எங்காவது கிடைத்தால் நிறைய ரசித்து சாப்பிடுவீர்கள்தானே? வழக்கமாக வெளியில் செல்லும்போது அம்மா அப்பாதான் உங்களுக்கு சாலட்டும் தின்பண்டங்களும் வாங்கித் தந்திருப்பார்கள் இந்த கோடையில் உங்களுக்குப் பிடித்தமான சாலட்டை நீங்களே செய்யுங்கள். அதை அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கொடுத்து ருசியுங்கள்.

சாலட் செய்வது கடினமான வேலையல்ல. அம்மா காய்கறி வெட்டும்போது நீங்கள் கவனித்திருப்பீர்கள் அல்லது உதவி செய்திருப்பீர்கள் இல்லையா? அதேபோல கத்தி கத்திரிகளை கண்டால் எதையாவது வெட்ட வேண்டும் என்று உங்களுக்கு இயல்பாகவே தோன்றுமில்லையா? இந்த இரண்டு ஆர்வமும் இருந்தால் எளிமையாக சாலட் செய்துவிடலாம். அம்மாவிடம் சாலட் செய்யப்போகிறேன் என்று சொல்லி விட்டு சில பழங்களையும் கத்தியையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை சிறுசிறு துண்டுகளாக வெட்டுங்கள் அவற்றை பெரிய பாத்திஇரத்தில் மொத்தமாக சேர்த்து கிளறுங்கள். ருசியான சாலட் தயார். பெற்றோருக்கும் ருசிக்கக் கொடுத்து பாராட்டை பெறுங்கள்.சாலட்டில் தேவையான சில பச்சைக் காய்கறிகளையும் சேர்த்துக் கொண்டால் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. கோடை நேர உடல் உஷ்ணத்தையும் தணிக்கும். எங்கே சாலட் செய்ய கிளம்பிவிட்டீர்களா? அதை செய்யும்போது கத்தியை மட்டும் கவனமாக கையாள வேண்டும் என்பதை ஞாபகத்தில் வச்சுக்கோங்க.

ஐஸ்கிரீம் உங்களுக்குப் பிடிக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் உங்களுக்கு ஐஸ்கிரீம் செய்யத் தெரியுமா? வீட்டிற்குவீடு குளிர்சாதன பெட்டி வந்துவிட்ட பிறகு ஐஸ்கிரீம் செய்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஐஸ் கிரீம் செய்வது கோடைக்கு நல்ல பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் அதை சுவைத்து மகிழ்ந்தும் ஆனந்தப்படலாம்.ஐஸ்கிரீம் மூலப்பொருட்களை பிசைந்து கொள்ளுங்கள் தேவையான அளவுக்கு இனிப்பும் சேர்த்துக் கொள்ளுங்கள். சாக்லெட் வனிலா அல்லது உங்களுக்குப் பிடித்த சுவை எதுவோ அந்தப் பொருட்களையும் சேர்த்து கலக்குங்கள். கெட்டியாகவும் அல்லாமல் திரவமாகவும் அல்லாமல் குளுகுளு தன்மை பதத்திற்கு கலக்கிய பின்பு பிரிஜ்ஜின் பிரீஸரில் சிறிது நேரம் வைத்திருங்கள். இப்போது நீங்களே தயாரித்த ஜில்ஜில் ஐஸ்கிரீம் சாப்பிடத் தயார். பெற்றோர் மற்றும் தோழன் தோழிகளுடன் ரசித்து சாப்பிடுங்கள்.

உங்களுக்கு ஒரிகாமி பற்றி பள்ளியில் சொல்லித் தந்திருக்கிறார்களா? காகிதத்தை மடித்து குறிப்பிட்ட இடங்களில் கத்தரிக்கோல் மூலம் நறுக்குவதால் புதிய வடிவங்களையும் உருவங்களையும் உருவாக்குவது ஒரிகாமி கலையாகும். இது உங்கள் கற்பனை திறனை வளர்க்கும். பூக்கள் பழங்கள் எழுத்துகள் பறவைகள் விலங்குகள் உருவங்களை ஒரிகாமி காகிதத்தில் செய்து அசத்துங்கள். அழகிய வடிவங்களை நண்பர்களிடமும் தோழிகளிடமும் காட்டி மகிழுங்கள்.அட்டையில் ஒட்டி அலமாரியில் வைத்து அலங்காரப் பொருளாகவும் பயன்படுத்தலாம். நினைவுப் பெட்டகத்தில் சேமித்து வைத்து மலரும் நினைவுகளாக பின்னாளில் அசைபோடலாம்.கோடையை பயனுள்ள வகையில் கழிக்க மிக முக்கியமான கலையாக ஓவியத்திறமையை பயன்படுத்தலாம். வண்ணம் தீட்டுவது புதிய ஓவியங்களை வரைந்து பழகுவது ஓவியங்களை சிற்பமாக உருவாக்க முயற்சிப்பது என உங்கள் நேஇரத்தை கலை வண்ணத்திற்காக செலவு செய்யலாம். அது உங்கள் புத்திக்கூர்மையை வளர்க்கும். பொறுமையை உயர்த்தும். அழகியல் ஆர்வத்தை மெருகேற்றும். வடிவமைப்புத் திறமையை வளர்க்கும். சிறந்த ஓவியங்களை வரவேற்பறையில் வைத்து அழகுபடுத்திக் கொள்ளலாம்.

புதிய புதிய வார்த்தைகளை கற்றுக் கொள்ளும் வார்த்தை விளையாட்டு உங்களுக்குப் பிடிக்கும் இல்லையா? இப்போது இதற்கென தனியே புத்தகங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அவற்றை வாங்கி குறுக்கு எழுத்துப் போட்டிகள் வார்த்தைகள் கண்டுபிடித்தலில் ஈடுபடுங்கள். உங்கள் புத்திக்கூர்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.அதேபோல புத்தகவாசிப்பும் பயனுள்ள பொழுதுபோக்காகும். உங்களுக்கு விருப்பமான கதைகள் கார்ட்டூன் நாயகர்கள் பற்றிய புத்தகங்கள் வரலாற்று குறிப்புகள் சமையல் கலை கதைகள் தலைவர்கள் வரலாறு உள்ளிட்ட உங்களுக்கு விருப்பமான தலைப்பிலான சில புத்தகங்களை இந்த கோடை விடுமுறையில் படித்து முடிப்பது என சபதம் எடுங்கள். அது உங்கள் அறிவை வளர்க்கும்.

உங்கள் விருப்பமான சைக்கிள் அப்பாவுடன் ஆசையாக பயணிக்கும் கார் பைக் ஆகியவற்றை சுத்தமாக்குங்கள். ஈஇரத்துணியால் துடைத்து அழுக்கு மற்றும் கறைகளை நீக்குங்கள் எண்ணெய் மற்றும் கிரீஸ் இட வேண்டிய இடங்களில் அவற்றை இட்டு வண்டியை பராமரியுங்கள்.

கண்ணாடி மாற்றுவது ஸ்போக்ஸ் மற்றும் நட்டுகள் மாற்றும் வேலைகளையும் செய்து பாருங்கள். அல்லது மெக்கானிக் செட் எடுத்துச் சென்று சீர்படுத்துங்கள். ஜாலியாக காலையிலும் மாலையிலும் ரவுண்டு செல்லுங்கள். உடலை வலுப்படுத்துங்கள்.சிறந்த பொழுதுபோக்குகளில் ஒன்று தோட்ட பராமரிப்பு. இது மனதை பக்குவப்படுத்தும். செடிகளை நடுவது விதைகளை பராமரிப்பது நீர் தெளிப்பது களை எடுப்பது என அடுக்கடுக்கான வேலைகள் உங்கள் ஆர்வத்தை தூண்டும். செடிகள் வளர்ந்து பூ பூப்பதும் காய் காய்ப்பதும் நிழல் தருவதும் உங்களுக்கு மனதளவில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வளர்க்கும்.

மனதுக்கு உற்சாகம் தரக்கூடியவை இசை. உங்களுக்கு விருப்பமான இசைக்கருவி ஏதாவது ஒன்றை இந்த கோடையில் இசைக்கப் பழகலாம். உடலுக்கு ஊக்கம் தரக்கூடியது நடனம். விரும்பிய நடனம் ஒன்றை கற்றுக் கொள்ளலாம். இதனால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறும். கல்வித்திறனும் மேம்படும்.

வீட்டில் இருக்கும் பொருட்கள் தூக்கி எறியும் நிலையிலுள்ள கழிவுப் பொருட்களைக் கொண்டு உங்கள் சிந்தனையில் புதிய பொருட்களை உருவாக்குங்கள். உங்கள் கல்வி மேஜைக்கான பென் ஸ்டாண்டு உள்ளிட்ட அலங்கார பொருட்களை உருவாக்குங்கள். காகிதங்களில் முகமூடி செய்து வண்ணம் தீட்டி பயன்படுத்தலாம். பூக்கள் வாழ்த்து அட்டைகள் தயாரிக்கலாம். ஐஸ்கிரீம் குச்சிகள் கார்டுபோர்டு அட்டைகள் வண்ணக்காகிதம் பென்சில் ஸ்கெட்ச் மூலம் உங்கள் விருப்பம்போல கலைப்பொருட்களை உருவாக்கி வீட்டையே அலங்கரித்துவிடலாம்.கைத்தையல் மூலம் உங்கள் உடைகளில் எம்ப்ராய்டரிங் செய்யலாம். அழகிய பட்டங்கள் செய்து நண்பர்களுடன் சேர்ந்து பறக்கவிட்டு மகிழலாம். வேடிக்கையான சில விளையாட்டுகளை நீங்களாக உருவாக்கி நண்பர்களுடன் விளையாடலாம். இப்படி வெயிலில் திரியாமல் உங்கள் எண்ணம்போல பனுள்ள வழிகளில் பொழுதை கழித்தால் அம்மா திட்டமாட்டாங்க. அப்பா நீங்க கேட்டதெல்லாம் வாங்கித்தருவார்.

பெற்றோருக்கு சில வார்த்தைகள்: உண்மையில் செயல்படாத குழந்தைகள் சேட்டை செய்யத் தொடங்கிவிடுவார்கள். அவர்களை பயனுள்ள வகையில் செயல்பட தூண்டுவது பெற்றோரின் கடமை. அப்படி தூண்டிவிட்டால் அவர்களின் திறமையும் வளரும். கோடையின் கொடுமையும் குழந்தைகளை பாதிக்காது.


Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker