சமையல் குறிப்புகள்புதியவை
மாதுளை இளநீர் ஜூஸ்
தேவையான பொருட்கள் :
- கிர்ணிப் பழம் – 200 கிராம்,
- மாதுளை முத்துக்கள் – அரை கப் ,
- இளநீர் – ஒரு கப்,
- இளநீர் வழுக்கை – 2 மேஜை கரண்டி ,
- தேன் – 2 தேக்கரண்டி,
- உப்பு – ஒரு சிட்டிகை,
- தண்ணீர் – 200 மி.லி. ,
- குல்கந்த் – சிறிதளவு ,
- எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
செய்முறை:
- கிர்ணிப் பழத்தை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.
- அத்துடன் இளநீர் வழுக்கை, இளநீர் கலந்து விழுதாக அரைக்கவும்.
- அதில் எலுமிச்சை சாறு, தேன், உப்பு, குல்கந்த், தேவைக்கு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
- ஐஸ் கட்டிகள் சேர்த்து பருகலாம்.