சமையல் குறிப்புகள்புதியவை
மாங்காய் இனிப்பு ஊறுகாய்
தேவையான பொருட்கள்
- பொடியாக நறுக்கிய (அ) துருவிய மாங்காய் – ஒரு கப்,
- சர்க்கரை – ஒரு கப்,
- மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
- எண்ணெய் சேர்க்காமல் வறுத்து அரைத்த சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்,
- கசகசாத்தூள் – ஒரு டீஸ்பூன்,
- உப்பு – ஒரு டீஸ்பூன்,
செய்முறை:
- கொடுத்துள்ள எல்லா பொருட்களையும், ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு மெல்லிய துணியால் கட்டவும்.
- வெயிலில் 10 முதல் 20 நாள் வைக்கவும்.
- இதில் உள்ள சர்க்கரை கரைந்து லேகியம் மாதிரி ஆகிவிடும்.
- இந்த பதத்தில் எடுத்து வைக்கவும். மாதக் கணக்கில் கெடாது.
- சப்பாத்தி, பூரி, உப்புமா போன்ற டிபன் வகைகளுடன் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.