அழகு..அழகு..புதியவை

பாதவெடிப்பு ஏற்படாமல் தடுக்கும் பொருட்கள்

சருமத்தில் ஈரப்பதம் குறைவதால் விரிசல் ஏற்பட்டு பாதவெடிப்பு உண்டாகிறது. பாதங்களில் ஈரப்பதத்தை பாதுகாத்து பாதவெடிப்பு ஏற்படாமல் தடுக்கும் சில பொருட்களை தற்போது காணலாம்.

பாதவெடிப்பு என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகும். குறிப்பாக, பெண்களுக்கு அதிகமாக பாதவெடிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. பாதவெடிப்பு ஏற்படுவதால் விரும்பிய காலணிகளை அணிய முடியாமல் அவதிப்படும் நிலை உருவாகிறது.

பாதங்களை சரியாக பராமரிக்காததன் காரணமாகவே பாதவெடிப்பு ஏற்படுகிறது. குதிகாலில் ஏற்படுவதால் இதனை குதிகால் வெடிப்பு என்றும் கூறலாம். சருமத்தில் ஈரப்பதம் குறைவதால் விரிசல் ஏற்பட்டு பாதவெடிப்பு உண்டாகிறது. பாதவெடிப்பு தீவிரமடைந்தால் பாக்டீரியா அல்லது ஃபங்கஸ் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.



பாதவெடிப்பு அசௌகரியம் தருவதுடன், வலி மற்றும் ரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. பாதவெடிப்பு ஏற்பட பல காரணங்கள் உண்டு. பாதங்களில் ஈரப்பதத்தை பாதுகாத்து பாதவெடிப்பு ஏற்படாமல் தடுக்கும் சில பொருட்களை தற்போது காணலாம்:

மவுத்வாஷ்: ஆல்கஹால் இருப்பதால் கால்நகங்களை சுத்தப்படுத்த மவுத்வாஷ் உதவும். வறண்ட சருமத்தை மிருதுவாக்கவும் உதவும். நீரில் மவுத்வாஷை கலந்து, அக்கலவையில் 15-20 நிமிடங்கள் பாதங்களை ஊறவைக்கவும். பிறகு pumice stone எனப்படும் நுரைக்கல் கொண்டு இறந்த சரும அணுக்களை அகற்றலாம்.



வாழைப்பழம்: வைட்டமின் ஏ உள்ள வாழைப்பழம் சருமத்தின் நீளும் தன்மையை மற்றும் ஈரப்பதத்தை பாதுகாக்க உதவும். வாழைப்பழத்தை மசித்து பாதங்களில் தடவி 20 நிமிடங்கள் விட்டு கழுவலாம்.

வாஸ்லின், எலுமிச்சை: வறண்ட சருமத்திற்கு ஈரப்பதம் கூட்ட வாஸ்லின் உதவும். புதிய சரும அணுக்கள் உற்பத்தியாக எலுமிச்சை சாறு உதவும். இரவில் வாஸ்லின் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து பாதங்களில் தடவி, உடற்சூடு வெளியேறாமல் தடுக்க கம்பளியால் ஆன காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்தவுடன் பாதங்களை கழுவி விடவும்.



கற்றாழை: இரவில் கற்றாழையைப் பாதங்களில் தடவி, காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்து பாதங்களை கழுவவும். தொடர்ந்து 4-5 நாட்கள் இப்படி செய்து வர, வறண்ட பாதங்கள் மிருதுவாகும்.

சமையல் சோடா: சருமம் மிருதுவாக சமையல் சோடா உதவும். சமையல் சோடா கலந்த வெந்நீரில் 15 நிமிடங்கள் பாதங்களை ஊறவிடவும். பிறகு, நுரைக்கல் கொண்டு பாதங்களை தேய்த்து சுத்தமான நீரில் கழுவவும்.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker