கொரோனாவிற்கு எதிரான முழுநாள் உணவு
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நாம் இரண்டு விஷயங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டும். ஒன்று.. உடலை சுகாதாரமாக வைத்துக்கொள்ளவேண்டும். இன்னொன்று.. சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும். பீட்சா, பர்கர், சான்ட்விச், சுகாதாரமற்ற எண்ணெய்யில் தயாரிக்கப்படும் தள்ளுவண்டி பலகாரங்கள், குளிர்பானங்கள் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானவை. இதுபோன்ற உணவுகளால் நமது உடலில் கழிவுகள் தேங்கிவிடுகின்றன. அந்த தேக்கத்தால், உடல் இயக்கம் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்புசக்தி குறையும் நிலை ஏற்பட்டு விடுகிறது. அதுதான் கொரோனா போன்ற தொற்று வியாதிகள் நமது உடலை தாக்குவதற்கு காரணமாக அமைகின்றன.
“நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க, சூப் வகைகள், சிறுதானிய உணவுகள், முட்டை, காய்கறிகள், பழவகைகள், உலர் பழவகைகள், பால் போன்ற உணவுகளை சாப்பிடவேண்டும். தினமும் காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளையும் முறைப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்” என்கிறார், ஊட்டச்சத்து துறை நிபுணர் பிரியா பாஸ்கர்.
ஈரோட்டைச் சேர்ந்த இவர் தரும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் உணவுப்பட்டியல் இது..
காலை 7 மணி – மிளகு கஷாயம்.
8.30 மணி- கோதுமை தோசை, தக்காளி சட்னி, பாதாம் போன்ற பருப்பு வகைகள் மற்றும் பூண்டு பால்.
11 மணி – மாதுளை, எலுமிச்சை ஜூஸ்.
மதியம் 1 மணி – சிவப்பு அரிசி சாதம், நாட்டு காய்கறி கூட்டு, பசலைக்கீரை வெஜ் மிக்ஸ், வெண்டைக்காய் பிரட்டல், தக்காளி இஞ்சி ரசம், பழம் கலந்த தயிர் சாதம்.
மாலை 5 மணி – சோயா பீன்ஸ் சூப், கிரீன் சாலட்.
இரவு 7.30 மணி – ராகி வெங்காய கல்தோசை, அவகேடா தக்காளி தொக்கு.
9.30 மணி – பனங்கற்கண்டு பால்.
பிரியா பாஸ்கர்