சமையல் குறிப்புகள்
சூப்பரான மிக்ஸ்டு காய்கறி ஊறுகாய்
தேவையான பொருட்கள் :
- சிறிய காலி ஃப்ளவர் – 1,
- கேரட் – 2,
- நூல்கோல் – 2,
- முள்ளங்கி – 2,
- மாங்காய் – 1,
- பச்சைப் பட்டாணி – 1 கப்,
- எலுமிச்சைப் பழச்சாறு – 1/2 கப்,
- கடுகு எண்ணெய் – 300 கிராம்,
- உப்பு – தேவைக்கு,
- மிளகாய் தூள்,
- கடுகுத்தூள் – 1/2 கப்,
- மஞ்சள் தூள் – தேவைக்கு,
- நீளமாக வெட்டிய பச்சை மிளகாய், இஞ்சி – தேவைக்கு.
செய்முறை:
- காலிஃப்ளவரை சுத்தம் செய்து கழுவிய பிறகே உபயோகிக்கவும்.
- மற்ற காய்களையும் சுத்தம் செய்து துணியால் துடைத்து 1/2 மணி நேரம் ஃபேனுக்கு அடியில் உலர வைத்து உபயோகிக்கவும்.
- எல்லா காய்களையும் நறுக்கி, அதில் உப்பு, எலுமிச்சைச்சாற்றையும் கலந்து மூன்று நாட்களுக்கு சுத்தமான காய்ந்த பாத்திரத்தில் வைத்திருக்கவும். அடிக்கடி எடுத்து நன்றாக குலுக்கி விடவும்.
- பிறகு இரண்டு நாட்கள் வெயிலில் உலர விடவும்.
- ஒரு காய்ந்த சுத்தமான ஜாடி அல்லது பாட்டிலில் இந்தக் கலவையை கொட்டி மிளகாய் தூள், மஞ்சள், கடுகுத் தூள், பச்சையான கடுகு எண்ணெய் சேர்த்துக் கலக்கவும்.
- அப்படியே காற்றுப் புகாதபடி 3 நாட்கள் வைத்திருக்கவும்.
- இந்த காய்கறி மிக்ஸ் ஊறுகாய் 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். சுவையாக இருக்கும்.
- கடுகு எண்ணெய் பிடிக்காதவர்கள் நல்லெண்ணெய் சூடு செய்து பயன்படுத்தலாம்.