சமையல் குறிப்புகள்
கேழ்வரகு மசாலா பூரி
தேவையான பொருட்கள் :
- கேழ்வரகு மாவு – 2 கப்
- அரிசி மாவு – 2 டீஸ்பூன்
- ரவை – ஒரு டீஸ்பூன்
- ப.மிளகாய் – 3
- கொத்தமல்லி தழை – சிறிதளவு
- எண்ணெய் உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
- கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- மிக்ஸியில் ரவையை உப்பு சேர்த்து அரைக்கவும்.
- அதனுடன் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, சேர்த்துக் கலந்து ப.மிளகாய், கொத்தமல்லி தழை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
- பிசைந்த மாவை பூரிகளாக தேய்த்து வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தேய்த்து வைத்த பூரிகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.
- சூப்பரான கேழ்வரகு மசாலா பூரி ரெடி.