ஆரோக்கியம்

மலச்சிக்கல், முதுகெலும்பு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஆசனம்

விரிப்பில் காலை நீட்டி உடலை நேராக நிமிர்த்தியபடி அமர வேண்டும். இடதுகாலை வலப்பக்கமாக மடக்கி வைக்க வேண்டும். வலது காலை இடதுகாலிற்கு வெளிப்புறமாக கொண்டுவந்து தரையில் ஊன்றிக் கொள்ள வேண்டும்.



மூச்சை வெளியேற்றியவாறு உடலின் மேல்பாகத்தை வலதுபக்கமாகத் திருப்ப வேண்டும். முதுகுத்தண்டுவடம் வளையாமல் நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

வலதுகால் பாதத்தை இடதுகையால் பிடித்துக்கொண்டு வலதுகையை பின்புறம் வைத்துக் கொள்ள வேண்டும். இயல்பாக மூச்சிழுத்தவாறு 20 முதல் 30 நொடிகள் இதே நிலையில் இருக்கலாம். இப்போது மெதுவாக இந்நிலையிலிருந்து வெளியே வந்து திரும்பவும் மறுபக்கம் இதேபோல செய்ய வேண்டும்.

நன்மைகள்

இடுப்பு மற்றும் முதுகு எலும்புகள் நெகிழ்ச்சியடைகின்றன. தலையோடு உடல் முழுவதும் நன்றாகத் திருப்பி செய்யும்போது மூளைக்குச் செல்லும் இரத்தஓட்டம் சீராகிறது. இதனால் மைக்ரேன் தலைவலிக்கு காரணமான மூளை நரம்புகளின் இறுக்கம் தளர்வடைகிறது. கழுத்து இடுப்பு மற்றும் தோள்பட்டை தசைகள் விரிவடைகின்றன.



செரிமான உறுப்புகளில் உள்ள கழிவுகளை அகற்றி செரிமானத்தை தூண்டுகின்றன. இதயம் சிறுநீரகம் கல்லீரல் நுரையீரல் உறுப்புகளை தூண்டுகிறது. உடல்சோர்வு முதுகெலும்பு முதுகுவலி மற்றும் மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் அசௌகரியங்களிலிருந்து விடுவிக்கிறது. உள்ளுறுப்புகளை சுத்தம் செய்கிறது.

உள்ளுறுப்பு திசுக்களில் இருக்கும் அதிகப்படியான நச்சுகள் மற்றும் வெப்பத்தை வெளியேற்றுகிறது. நீரிழிவு. நீரிழிவு, மலச்சிக்கல், முதுகெலும்பு பிரச்சனைகள், கர்ப்பப்பை வாய் தொற்றுகள், சிறுநீர்த்தாரை தொற்று நோய்களை போக்குகிறது.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker