கண் சுருக்கம் நீங்க எளிய வீட்டு வைத்தியம்
கண்களுக்கு கீழ் உள்ள சருமம் மிகவும் சென்சிடிவ்வான பகுதியாக இருப்பதினால் இதற்கு அதிக கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். ஆனால் நாமோ இந்த பகுதிக்கு அதிகமான கவனத்தை செலுத்துவது இல்லை. இதனால் கருவளையங்கள், வீங்கிய கண்கள், கண் சுருக்கம்மற்றும் சோர்வான கண்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
கண் சுருக்கங்கள் நீங்க ஆரஞ்சு பழத்தோல் மற்றும் வேப்ப எண்ணெய் இரண்டும் பயன்படுகிறது. ஆரஞ்சு பழம் தோல் சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்த உதவுவதால், கண்களில் உள்ள சுருக்கத்தை சரிசெய்ய பயன்படுகிறது. மேலும் வேப்ப எண்ணெய் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளதால், கண்களை பாதுகாக்க பயன்படுகிறது. சரி இதை இரண்டையும் பயன்படுத்தி செய்யக்கூடிய அழகு குறிப்பு பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
ஜோஜோபா எண்ணெய் – 1 தேக்கரண்டியளவு
அரைத்த ஆரஞ்சு தோல் பவுடர் – 1 தேக்கரண்டி
வேப்ப எண்ணெய் – 3 முதல் 4 துளி
இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். பின் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். இந்த முறையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்யலாம். இவ்வாறு செய்வதினால் கண் சுருக்கம் நீங்க ஆரமிக்கும்.
சிலருக்கு கண்கள் எப்பொழுதும் பொலிவிழந்து மிகவும் சோர்வாக காணப்படும். அவர்களுக்கான அழகு குறிப்பு டிப்ஸ் இதோ.
ஜோஜோபா எண்ணெய் – 2 தேக்கரண்டியளவு,
தேங்காய் எண்ணெய் -1 தேக்கரண்டியளவு
அப்ரிகாட் கர்னல் எண்ணெய் – 2 தேக்கரண்டியளவு ,
அவோகேடா எண்ணெய் – 2 தேக்கரண்டியளவு
அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி கண்களைச் சுற்றித் தடவிவிட்டு படுகைக்குச் செல்லுங்கள். அடுத்த நாள் காலையில் எழுந்து கழுவுங்கள். இதனைத் தினமும் இரவு செய்யலாம். இவ்வாறு தினமும் செய்து வருவதினால் கண் சோர்வு நீங்க ஆரம்பிக்கும்.