சமையல் குறிப்புகள்
சூப்பரான மொச்சை சாம்பார்
தேவையான பொருட்கள் :
- உலர் மொச்சை – 100 கிராம்,
- சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன்,
- துவரம்பருப்பு – 100 கிராம்,
- புளி – எலுமிச்சைப் பழ அளவு,
- தேங்காய்த் துருவல் – சிறிய கப்,
- கடுகு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன்,
- தனியா – ஒரு டீஸ்பூன்,
- கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
- காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் – சிறிதளவு,
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
- மொச்சையை 5 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்துக் கொள்ளவும்.
- துவரம்பருப்பை குழைவாக வேகவிடவும்.
- தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பை எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
- புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி சாம்பார் பொடி, உப்பு, வேகவைத்த மொச்சை சேர்த்து கொதிக்கவிடவும்.
- இதனுடன் வேகவைத்த பருப்பு, அரைத்து வைத்த விழுது சேர்த்துக் கலந்து, மேலும் கொதிக்கவிடவும்.
- சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.
- கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும்.
- சூப்பரான மொச்சை சாம்பார் ரெடி.