வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் பழக்கூழ் பேசியல்
வெயில் காலங்களில் நம் சரும நிறம் சற்று மங்களாகவே காணப்படுவது வழக்கம் தான். இன்னும் சிலருக்கு முகத்தில் வந்த முகப்பருக்கள் அப்படியே கருப்பாக மாறி விடும். பலருக்கு முகத்தில் தோல் சுருக்கம் ஏற்படும், முகம் வறண்டும் காணப்படும். இதற்கு உங்கள் வீட்டிலேயே முகத்தை அழகு படுத்த ஏராளமான அழகு குறிப்பு பொருட்கள் உள்ளன. அவை உங்கள் கருப்பான முகத்தை மறைத்து அழகாகவும், பளிச் சென்றும் காட்டும்.
தக்காளி, தர்பூசணி மற்றும் ஆப்பிள் ஆகியவற்றின் உட்பகுதியை எடுத்துக்கொள்ளவும். இவை மூன்றையும் அரைத்து பேஸ்ட் போல தயாரித்துக் கொள்ளலாம். முகத்தில் போட்டுகொண்டு 15 நிமிடம் அப்படியே வைத்துக் கொள்ளலாம். சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினீர்கள் என்றால் முகம் இளமையாகவும், குளு குளு வென்றும் இருக்கும்.
கொட்டை நீங்கிய பேரிட்சை மற்றும் உலர்ந்த திராட்சை எடுத்துக்கொண்டு அவற்றை ஒரு நாள் முழுவதும் வெண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்பு பப்பாளி உட்பகுதியை எடுத்துக்கொண்டு, ஊற வைத்த பழக்கூழுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இதை உங்கள் முகத்தில் பேஸ் மாஸ்க் போல நீங்கள் பூசிக் கொள்ளலாம் . காய்ந்த பின்பு முகத்தை கழுவிக் கொள்ளலாம். இப்படி வாரம் இரண்டு முறை செய்தால் உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, பளபளப்பாக முகம் ஜொலிக்கும்.
தேங்காய் பால் உங்களுக்கு தேவையான எடுத்துக்கொண்டு, அதில் பாதி அளவு கடலை மாவு கலந்து கொள்ளலாம். இவை இரண்டையும் நீங்கள் பேஸ்ட் போல் தயாரித்து கொள்ளலாம். முகத்தில் பூசிக்கொண்டு அந்த பேஸ்ட் காயும் வரை காத்திருக்கவும். பின்பு தண்ணீர்கொண்டு கழுவிக்கொள்ளலாம். இதேபோல் வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் முகத்தில் மாசுக்கள், கருப்பு வண்ணம் நீங்கிவிடும்.
அடுத்ததாக இளநீர் எடுத்துக்கொள்ளலாம். இளநீரில் உள்ள வழுக்கை போன்ற பகுதியை எடுத்துக் கொள்ளவும். பின்பு அதில் இளநீர் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இந்த பேஸ்டை முகம் மற்றும் கரும்புள்ளைகள் இருக்கும் இடத்தில் தடவிக் கொள்ளலாம். தினமும் இதே போல் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பளிச்சென்று மின்னும்.