இவை ஆண்களின் பல்வேறு பிரச்சினைக்கு தீர்வை தரும்!..
வெந்தயம்
ஆண்களின் பல்வேறு பிரச்சினைக்கு தீர்வை தரும் ஆற்றல் இந்த வெந்தயத்திற்கு உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் ரத்த ஓட்டத்தை சீராக்கி விந்தணுக்களை ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ளும். எனவே, வாரத்திற்கு 1 முறையாவது வெந்தயத்தை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
கொண்டை கடலை
இது போன்ற உணவுகளை பலர் மறந்து விட்டனர். ஆனால், ஆண்களுக்கான மிக முக்கிய உணவுகளில் இதுவும் ஒன்றாம். இவற்றில் அதிக அளவில் புரதச்சத்தும், நார்ச்சத்தும் உள்ளது. எனவே உடலின் வளர்ச்சி சீராக இருக்குமாம். ஆண்கள் கொண்டை கடலையை வாரத்திற்கு ஒரு முறை தவறாது சாப்பிட வேண்டுமாம்.
கிரீன் டீ
எண்ணற்ற அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்த இந்த க்ரீன் டீயை ஆண்கள் கட்டாயம் வாரத்திற்கு ஒரு முறையாவது குடிக்க வேண்டும். அந்தரங்க உறுப்பில் வர கூடிய பாதிப்புகளை சரி செய்ய இந்த கிரீன் டீ உதவும். மேலும், இதனை தினமும் குடித்தால் பலன் பல மடங்காக கிடைக்கும்.
கேரட்
ஆண்களின் மிக உற்ற நண்பனாக இந்த கேரட் கருதப்படுகிறது. இதனை வாரத்திற்கு முறையாவது சாப்பிட்டு வந்தால் விறைப்பு தன்மை, விந்தணு பாதிப்பு போன்ற பிரச்சினைகள் தீர்வுக்கு வருமாம். அத்துடன் புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் இந்த கேரட்டிற்கு உள்ளது.
சிவப்பு இறைச்சி
பொதுவாக ஆண்கள் இது போன்ற சிவப்பு இறைச்சியை சாப்பிடுவதன் மூலம் அதிக பலன் அவர்களுக்கு கிடைக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன.
ஏனெனில், இவற்றில் ஜின்க், இரும்புசத்து, புரதம் போன்றவை அதிக அளவில் இருப்பதால் ஆண்களின் உடல் அதிக வலிமை பெறும். எனவே, ஆடு, மாடு, போன்றவற்றின் இறைச்சியை வாரத்திற்கு 1 முறை எடுத்து கொள்ளலாம்.
டார்க் சாக்லேட்
சாக்லேட் என்பது குழந்தைகள் மட்டும் சாப்பிட கூடிய உணவாக பலர் இதனை பார்க்கின்றனர். ஆனால், இது ஆண்களுக்கும் உரித்தான முக்கிய உணவாம்.
எந்தவித கலவையும் சேர்க்காத சாக்லேட்டை சாப்பிடுவதால் ஆண்களுக்கு ரத்த ஓட்டமும் மன அழுத்தமும் சீராக இருக்கும்.
வாழைப்பழம்
அதிக அளவில் பொட்டாசியம் நிறைந்த உண
வுகளில் இந்த வாழைப்பழம் தான் முதல் இடத்தில் உள்ளது. இதனை ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும்.
இவை எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு தாம்பத்தியத்தில் அதிக ஆற்றலுடன் செயல்படவும் வழி செய்கிறதாம்.
பயிறு வகைகள்
ஆண்களின் உணவில் வெறும் அரிசி மட்டும் இடம் பெறுவது நல்லது அல்ல. எனவே, கட்டாயம் பயிறு வகை உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும்.
இவை உடல் எடையை கூடாமல் வைப்பதோடு ஆரோக்கியமான உடல் அமைப்பை ஆண்களுக்கு ஏற்படுத்தும்.
தக்காளி சாறு
லிகோபேன் என்கிற முக்கிய மூல பொருள் இந்த தக்காளியில் உள்ளதால் இதனை வாரம் ஒரு முறையாவது ஜுஸ் போன்று தயாரித்து குடிக்கலாம்.
மேலும், இவை கணையம், பெருங்குடல், ப்ரோஸ்டேட் பகுதி ஆகியவற்றில் புற்றுநோய் வருவதை தடுத்து விடும்.
அவகேடோ
ஆண்களின் நலத்தை காப்பதில் இந்த அவகேடோ பழத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. இவற்றில் கெட்ட கொலஸ்ட்ராலை அழிக்க கூடிய தன்மை நிறைந்துள்ளதால் வாரத்திற்கு ஒரு முறையாவது இதனை சாப்பிடுவது சிறந்தது. அத்துடன் உயர் ரத்த அழுத்தத்தையும் இந்த பழம் குறைத்து விடுமாம்.
கோஜி பெரி
பல ஆயிரம் வருடமாக இந்த உணவு பொருள் மிக பிரபலமானது. இதை பற்றிய ஆராய்ச்சியில் ஒரு அருமையான தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது கோஜி பெரியை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடும் ஆண்களுக்கு பிறப்புறுப்பில் வர கூடிய புற்றுநோய் கட்டிகளில் இருந்து காக்கிறதாம்.