சமையல் குறிப்புகள்

ஜெலப்பினோ சீஸ் ஃபிங்கர்

தேவையான பொருட்கள்

  • சோளம் – 1 கப் மஞ்சள்
  • சர்க்கரை – 1 தேக்கரண்டி
  • பேக்கிங் சோடா – 1/2 தேக்கரண்டி
  • உப்பு – 1/2 தேக்கரண்டி
  • மோர் 1 கப்
  • முட்டை – 1
  • ஸ்ப்ரிங் ஆனியன் – சிறிதளவு
  • செடர் சீஸ் – கால் கப் துருவியது
  • ஜெலப்பினோ – 1-2 மேஜைக்கரண்டி
  • உருகிய அன்சால்ட்டட் பட்டர் – 1/4 கப்



செய்முறை

  • ஸ்ப்ரிங் ஆனியன், ஜெலப்பினோவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • மைக்ரோவேவ் அவனில் நடுப்பகுதியில் ரேக்கை வைத்து 218 டிகிரியில் ப்ரீஹீட் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் கார்ன் ஸ்டிக் பேனையும் 10 நிமிடம் வைத்து சூடுபடுத்த வேண்டும்.
  • சோளம், சர்க்கரை, பேக்கிங் சோடா மற்றும் உப்பு ஆகியவற்றை ஒரு பெரிய பௌலில் போட்டு நன்கு கலக்க வேண்டும்.
  • இன்னொரு பௌலில் மோர் மற்றும் முட்டையை நன்கு கலக்கி வைத்து கொள்ளவும்.
  • நன்றாக கலந்ததும் அத்துடன் கலக்கி வைத்த சோள மாவை சேர்க்கவும்.
  • மேலும் ஸ்ப்ரிங் ஆனியன், ஜெலப்பினோ, செடர் சீஸ், பட்டர் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இப்போது மைக்ரோவேவ் அவனில் இருந்து பேனை வெளியே எடுத்து இரண்டு மேஜைக்கரண்டி பட்டர் தடவி அதில் செய்து கலந்து வைத்ததை ஊற்றி 12 முதல் 15 நிமிடம் வரை வைத்து பொன்னிறமானதும் எடுக்கவும்.
  • மோல்டுகள் இருந்து வெளியே எடுப்பதற்கு முன் 3 முதல் 5 நிமிடங்கள் வரை கார்ன் ஸ்டிக்கை வைத்து ஆறியபின் இறக்கவும்.
  • சூடான ஜெலப்பினோ சீஸ் ஃபிங்கர் ரெசிபி தயார்.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker